Tweet |

"Nyabag" - ஞாபகம் என்பதின் சுருக்கத்தை தனது பெயராகவும், தமிழ் எழுத்தான "ந"'வை தனது லோகோவாக கொண்டுள்ள இந்த மென்பொருள் நமது அன்றாட வேலைகளையும், நம் வாழ்கையின் முக்கியமான நிகழ்வுகளையும் சரியான நேரத்தில் நமது அலைப்பேசி மூலமாகவோ அல்லது மெயில் மூலமாகவோ நமக்கு நினைவு படுத்துகிறது. இந்த மென்பொருள் ஆன்லைன் என்பதால் எந்த இடத்தில் இருந்தும் நமது உலாவி மூலம் இதை சுலபமாக பயன்படுத்தமுடியும்.
நாம் இந்த மென்பொருளில் உறுப்பினராக நமது மெயில் முகவரியும் நமக்கேற்ற பாஸ்வோர்ட் ஆகியவற்றை கொடுத்து நிமிடத்திற்குள் நமது செயல்களை இதில் பதிவேற்ற தொடங்கி விடலாம்.
இதில் நமது வேலைகளை நமக்கு எந்த தினத்தில் நினைவுப்படுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டு, அது ஒரு முறை நடக்க போகும் நிகழ்வா அல்லது வாரம் ஒருமுறையா அல்லது மாதம் ஒருமுறையா என்று கூறிவிட்டால் போதும், அந்த நிகழ்வை நமது அலைபேசியிலும், மெயிலிலும் நினைவு படுத்துகிறது இந்த மென்பொருள். உதாரணமாக உங்களது நண்பரின் பிறந்தநாள் என்றால் அவரது பிறந்தநாள் தேதியை கொடுத்துவிட்டு, வருடம் ஒரு முறை நடக்கும் நிகழ்வு என்றும் கொடுத்துவிட்டால் போதும் வருடா வருடம் உங்கள் நண்பரின் பிறந்தநாளை உங்களக்கு நினைவுப்படுத்தும் "Nyabag". இந்த மென்பொருளின் மற்றும் ஒரு சிறப்பம்சம் இதில் உள்ள நாட்குறிப்பு. நமது அன்றாட தினங்கள் எப்படி இருந்தது என்று நாம் எழுதிவைத்து கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் நமது தினத்தை பொருத்து smiley'களை வைத்துக்கொள்ளலாம்.
இந்த மென்பொருள் தற்போது பீட்டா அளவில் உள்ளதால் இன்னும் பல சிறப்பம்சங்கள் இதில் வர வாய்ப்புள்ளது. இத்தனை வசதிகளும் கொண்டுள்ள இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் என்பது நமக்கு மற்றுமொரு மகிழ்ச்சி. இந்த மென்பொருளை உபயோகித்து பார்த்துவிட்டு பின்னூட்டம் இடுங்கள். இந்த மென்பொருளை உபயோகிக்க இந்த உரலியை சொடுக்கவும்.
Tweet |
|
|