Monday, March 8, 2010

மற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.

நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6  வலைபதிவுகளுக்கு சென்று நம் மனதிற்கு பிடித்த விசயத்தை படிப்போம். அதுவும் கண்டிப்பாக தொழில்நுட்பம் அல்லது சினிமா பற்றிய வலைபதிவுகளுக்கு நிச்சயம் நமது கணிணியில் இடம் கொடுப்போம். அப்போது நாம் விசயத்தை படித்துவிட்டு  அவர்களுக்கு பின்னூட்டம் இடாமலேயே வந்து விடுவோம். நேரம் இன்மை காரணமாக அந்த பதிவில் இருந்து வேறு ஒரு பதிவிருக்கு தாவி விடுவோம். அப்படி செய்யாமல் நாம் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்கும் பின்னூட்டம் இடுவதால் நமக்கு கிடைக்கும் முக்கியமான 5 பயன்களை பற்றி பார்போம். 
01 . ஒவ்வொரு பதிவரின் எழுத்துக்கு அங்கீகாரம்: ஒவ்வொரு பதிவையும் எழுதும் முன்பு அந்த விசயத்திற்காக பதிவர்கள் கண்டிப்பாக மெனகெடுவார்கள். தங்களது வாசகர்களுக்காக நல்ல செய்தியை தரமுடனும், எளிமையாகவும் எடுத்து கூற ஆசை பட்டு தங்களது வலை பதிவில் செய்தியை பதிப்பார்கள். நீங்கள் பின்னூட்டம் இடுவதால் அவர்கள் தங்கள் பதிவுக்கு கிடைத்த சின்ன அங்கீகாரமாக நினைத்து இன்னும் நல்ல விசயங்களை நமக்கு கொடுப்பார்கள்.
02 .உங்கள் வலைப்பதிவின் Traffic 'ஐ அதிகரிக்க : நாம் மற்ற பதிவிர்களின் பதிவில் பின்னூட்டம் இடுவதன் மூலம் அந்த பதிவர்கள் தங்களது பதிவுக்கு பின்னூட்டம் இட்ட நபர் யார் என்ற ஆவலில் நமது பதிவுக்கு வந்து செய்திகளை வாசிப்பார். இது நமது பதிவுக்கு web Traffic 'ஐ அதிகரிக்க உதவும்.
03 . கருத்து மற்றும் நட்பு பறிமாற்றம்: ஒரே வகையான விஷயங்கள் நீங்கள் எழுதியதை போலேவே பலரும் எழுதி இருக்க கூடும். அந்த சமயத்தில் உங்களின் பின்னூட்டம் மூலமாக சிறந்த கருத்துகளை விவாதிக்க அது வித்திடுகிறது. அது மட்டும் அல்லாமல் முக்கியமாக நமது நட்பு வட்டம் இன்னும் பெரியதாக அமைய வாய்ப்பு ஏற்படுகிறது.
04 .உங்கள் அடுத்த பதிவிற்கான களம்: நமக்கு வரும் பின்னூட்டம் மூலமாக பலர் பல கேள்விகளை வினவி இருப்பார்கள். எனவே அதற்கு பதில் அளிக்கும் நோக்கில் உங்கள் அடுத்த பதிவிற்கு களம் அமைகிறது.
05 . உங்கள் பெயர் பிரபலம் அடையும்: நாம் பல வலை பக்கங்களிலும்,  வலைப்பதிவுகளிலும் பின்னூட்டம் இடுவதால் உங்கள் பெயர் அனைத்து இடங்களிலும் பரவும். கூகிள்'ல் உங்கள் பெயரை சொடுக்கினால் கண்டிப்பாக அது பல வலைப்பக்கங்களில் உங்களுக்கான முகவரியை தரும்.