Monday, May 24, 2010

வீடியோ கோப்பினை டெஸ்க்டாப் பின்னணியாக வைக்க முடியுமா?


இந்த கேள்விக்கு பதில் நூற்றுக்கு நூறு ஆம்.  இதுவரை கணிணி பயன்படுத்தி வரும் நாம் அனைவரும் டெஸ்க்டாப் பின்னணியாக நம் மனதிருக்கு பிடித்தமான புகைப்படங்களையோ, இணையத்தில் இருக்கும் சிறந்த கண்ணை கவரும் அழகிய படங்களையோ நமது டெஸ்க்டாப்இன் முகப்பு பக்கத்தில் வைத்து ரசித்து வந்திருக்கிறோம். இதை நாம் "Static Content" என கூறலாம். இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் Windows 7 இயங்கு தளத்தில் புகைப்படங்களை தானாக நேர இடைவெளியில் மாற்றும் வசதி உள்ளது. இருந்தாலும் இந்த வசதியையும் நாம் "Static Content" என்றுதான் கூற வேண்டும். 

எவ்வளவு நாட்கள் நாம் இந்த பழைய வசதியை வைத்து கொண்டு இருப்பது? புதிதாக அதுவும் நமது டெஸ்க்டாப் முகப்பு பக்கம் பிரமிப்பாக தெரிய வேண்டாமா? இந்த கேள்விகளை எல்லாம் மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டு இருக்கும் மென்பொருள் தான் "DreamScene Activator". இந்த மென்பொருளை கொண்டு நாம் நமது கணிணி முகப்பு பக்கத்தில் வீடியோ கோப்பினை சுவர்படமாக ஓட விடமுடியும். இதனால் நமது கணிணிக்கு புதியதொரு பொலிவு கிடைப்பது மிகவும் உண்மை. 




இந்த  மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். இந்த தளத்தில் சொல்லி உள்ளது போல் நிறுவி கொள்ளவும். மேலும் விவரங்களக்கு இந்த வீடியோ கோப்பினை பார்க்கவும். http://www.youtube.com/watch?v=lex9OB-leFc&feature=related. ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாள் பின்னூட்டம் இடவும். 

Monday, May 17, 2010

உலகில் தலைச்சிறந்த 100 டிவிட்டர் நகரங்கள்!

டிவிட்டர் பறவை தனது எல்லைகளை தாண்டி உலகில் உள்ள அனைத்து நகரங்களக்கும் பயணித்து வருகிறது. உலகில் உள்ள அனைத்து மக்களும் சரி டிவிடேரின் அருமைகளை புரிந்து வருகின்றனர். இன்றைய நிலையில் அதுவும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அசுர பாய்ச்சலக்கு டிவிட்டேரும் ஒரு பெரிய துணையாக இருந்து வருகிறது. சமிபத்தில் டிவிட்டர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் உலகில் உள்ள எந்தெந்த நகரங்கள் டிவிட்டேரை அதிகஅளவில் பயன்படுத்துகிறது என வெளியிட்டுள்ளது. 

இந்த அறிக்கையின் படி உள்ள நகரங்களை பார்த்தாலே நமக்கு எளிதில் அந்த நகரத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி எளிதாக புரிந்துவிடும். தற்போது உள்ள நிலையில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள நாடுகள் :
  • லண்டன்    
  • லாஸ் அன்ஜெலேஸ் 
  • சிகாகோ  
நமது இந்திய நகரங்களும் முதல் 100 இடங்களுக்குள் இருக்கிறது. எந்தந்தே நகரங்கள் என்று யூகிக்க தேவையில்லை. நமது நாட்டின் முக்கிய தொழில்நுட்ப நகரங்கள் மட்டும் தான் இடம் பெற்று உள்ளது.   அதன் பட்டியல் இதோ;

பெங்களூர் (23)
மும்பை (27)
டெல்லி (46)
சென்னை (58)
ஹைதராபாத் (77)
புனே (83)

முழு பட்டியல் இதோ : http://twitter.grader.com/top/cities

Friday, May 7, 2010

உங்கள் டெஸ்க்டாப் 3D'யில் புதுப்பொலிவு பெற!


உங்கள் கணிணியோ, அல்லது மடிக்கணினியோ எதுவாக இருந்தாலும் சரி முதலில் நாம் அழகு படுத்த நினைக்கும் இடம் நமது டெஸ்க்டாப். நாம் அடிக்கடி உபயோகப்படுத்தும் மென்பொருள் ஆகட்டும், கோப்புகள் ஆகட்டும் நமக்கு எதுவாக இருக்கா அனைத்தையும் நமது டெஸ்க்டாப்பில் கிடத்தி வைப்போம். சில சமயம் நிறைய கோப்புகள் இணைந்து நமது டெஸ்க்டாப் மிகவும் கச கசவென்று ஆகிவிடும். நாம் நினைக்கும் கோப்பினை எடுப்பது இன்னும் சிரமமாக மாறிவிடும். எனவே இந்த பிரச்சனைகளை தீர்க்க வந்துள்ள மென்பொருள் தான் BumpTop. ( இந்த மென்பொருள் பற்றிய கூடுதல் தகவல் இந்த பதிவின் இறுதியில்).



இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே சொடுக்குவும். மற்ற டெஸ்க்டாப் மென்பொருள் போன்றுதான் இந்த மென்பொருளும் இருக்க போகிறது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிகொள்ளுங்கள். ஆம் இது முழுவதும் 3D தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மென்பொருள். நீங்கள் உங்களது டெஸ்க்டாப் கோப்பினை கொண்டு எந்தவொரு இடத்தில் வேண்டுமானால் வைத்து கொள்ளலாம். பெரிதாக்கலாம், சிறிதாக்கலாம். பிரிவின் அடிபடையில் அடுக்கி வைக்கலாம். இதை பற்றி பேசுவதை விட உபயோகித்து பாருங்கள். இதை பற்றிய வீடியோ பதிவு: http://www.youtube.com/watch?v=Ntg1Gpgjk-A&feature=player_embedded#! . 
இந்த மென்பொருள் பற்றிய கூடுதல் தகவல்: இந்த மென்பொருளின் சேவை மற்றும், அதன் அற்புதங்களை கண்டு  கடந்த வாரம் கூகிள் நிறுவனம் இதை  வாங்கி விட்டது. 


கணிணித்துறையின் கற்பனை களஞ்சியம் !

உலகில் உள்ள எந்தவொரு மென்பொருள் சாதனையாளர்கள் ஆகட்டும், ஏன் எந்தவொரு துறையின் சாதனையாளர்கள் ஆகட்டும் அவர்களது வெற்றியின் காரணம் என்னவென்று நீங்கள் யோசித்து பார்த்தால் உங்களக்கு கிடைக்கும் பதில் அவர்களது கடின உழைப்பு, விடா முயற்சி என்று பல காரணங்கள் சொல்லலாம், ஆனால் அதை விட அவர்களது வெற்றிக்கு முதல் காரணம் அவர்கள் மனதில் விதைத்த அந்த முதல் துளி யோசனை / கற்பனை  தான். அவர்களிடம் எந்தவொரு கற்பனையும் இல்லாமல் இருந்திருந்தால் அவர்களது கடின உழைப்பும், விடா முயற்சியும் அவர்களுக்கு வெற்றி தந்திருக்க வாய்ப்பு சிறிதளவும் இல்லை. இதை நன்கு உணர்ந்த பல திறமைசாலிகள் தங்களது கற்பனைக்கு உருவம் கொடுத்து, அதற்க்கு உயிர் கொடுத்து தங்களது வாழ்கையில் நல்லதொரு நிலைக்கு தங்களை உயர்த்தி கொள்கின்றனர். சரி, என்னிடம் யோசனைகள் அவ்வளவு இல்லையே என்று கவலை படுகிறர்களா? கவலை வேண்டாம், இதோ யோசனைகளின் களஞ்சியமாக விளங்குகிறது TED. 

இந்த தளத்தில் பல துறையை சேர்ந்த வல்லுனர்கள் தங்களது கற்பனையை செயலாக மாற்றிய விதத்தை பற்றி பேசுகிறார்கள். மிகவும் ரசிக்கும் படியான இணையத்தளம். 

Monday, May 3, 2010

கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons.



கணிணி பயன்படுத்தும் அனைவரும் தங்களது மனதிற்கு பிடித்த உலாவியை கணிணியில் நிறுவி இணையதளங்களை உலா வருகின்றனர். தற்போது பல மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று இணையத்தில் ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் உலாவி எது என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அனேகமாக இந்த பதிவை கூட நீங்கள் கூகிள் க்ரோம் உலாவியை பயன்படுத்தி படித்து கொண்டிருக்கலாம். இந்த பதிவு  கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons பற்றியது. 





01. கூகிள் மெயில்: இந்த கூடுதல் வசதி மூலம் நாம் நமது உலாவியை கொண்டு நமது கூகிள் இணைய கடிதங்களை வாசிக்க முடிகிறது. மேலும் நமக்கு ஏதனும் புதிய செய்தி வந்திருப்பின் இந்த வசதி நமக்கு எளிதாக உலாவியில் தெரியப்படுத்துகிறது.

02. ஓட்டும் குறிப்பேடு(Sticky Notes): ஒரே சமயம் நாம் பல இணையத்தளங்களில் உலவும் போது நமக்கு தெரியாமலே சில நல்ல செய்திகள் அல்லது சில நல்ல கருத்துகள் கிடைக்க பெறுவோம். அத்தகய சமயத்தில் அதை நினைவிப்படுத்தி கொள்ள நமக்கு கை கொடுக்கிறது ஓட்டும் குறிப்பேடு(Sticky Notes) என்ற கூடுதல் வசதி. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் நாம் ஒரு இணையத்தளத்தில் எடுத்த குறிப்பை மீண்டும் நாம் அதே தளத்தில் நுழையும் போது தானாகவே இது செயல்படுகிறது.



03. Shareaholic: இன்றைய தகவல் தொழில்நுட்பக்காலத்தில் தகவல் பரிமாற்றங்கள் மிகவும் விரைவாக நடைபெறுகிறது. இதற்கு நமக்கு பெரிய பலமாக இருப்பது பல சமூக வலைத்தளங்கள். நாம் சில பல இணையதளங்களில் பார்க்கும் அல்லது உலவும் செய்தியை பிறருடன் பகிந்து கொள்ள எதுவாக உருவாக்கப்பட்ட கூடுதல் சேவைதான் Shareaholic. 



04. நினைவு படுத்து (Remind Me):  மனித நாகரிகம் எவ்வளவு வளர்ந்தாலும் மனிதர்களுக்கு உரித்தான சில விசயங்களுள் முக்கியம் பெற்றது ஞாபகமறதி. இந்த விஷயம் கணிணி உபயோக படுத்தும் நபர்களிடம் இப்போது அதிகரித்து வருகிறது. இதை அறிந்து உருவாக்கப்பட்ட சேவை தான் நினைவு படுத்து (Remind மீ). இதை கொண்டு நாம் சில செயல்களை சரியான நேரத்திற்குள்  செய்ய இதன் துணையை நாடலாம். 






05. பிக்னிக் (Picnik): நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக புகைப்படங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்போம். இதை தெரிந்து வைத்து உள்ள பிக்னிக் (Picnik) சேவை நாம் எந்தவொரு இணையத்தளத்தில் உலாவி கொண்டு  இருந்தாலும் அதன் உள்ளே உள்ள படங்களை நாம் நமது மனதிற்கு ஏற்ற வகையில் அதை மாற்றலாம். அந்த படங்களில் பல செயல்களை செய்ய இந்த சேவை வித்திடுகிறது. 





06. நெருப்புப்புச்சி (FireBug) : இணையத்தள வடிவமைப்பாளர்கள் மிகவும் ரசிக்கும் மற்றும் அவர்களக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட சேவை தான் இந்த  நெருப்புப்புச்சி (FireBug) . இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நம் எந்தவொரு தளத்தில் இருந்தாலும் சரி அதில் உள்ள எந்தவொரு பகுதியை தேர்ந்தெடுத்து இந்த  நெருப்புப்புச்சியை  (FireBug) சொடுக்கினால் அதன் அனைத்து கோடிங் முறையும் நமக்கு அகப்படுகிறது.







7. கூகிள் டாக்: இந்த கூடுதல் வசதி மூலம் நாம் நமது க்ரோம் உலாவியின் மூலமாகவே நமது நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் வசதியை ஏற்படுத்தி தருகிறது.






08. X- க்ரோம்: இந்த கூடுதல் வசதி நமது க்ரோம் உலாவியை அழகு படுத்த உதவி செய்கிறது. ஆம், இதை கொண்டு நாம் நமது உலாவிக்கு ஏற்ற வண்ணங்களையும், சிறப்பு அம்சங்களையும் நிறுவ முடிகிறது.



Sunday, May 2, 2010

கணிணி உலவுதலை மிகவும் எளிமைப்படுத்தும் மென்பொருள்.

கணிணி என்றவுடன் நாம் அனைவரும் செய்யும் முதல் காரியம்    
நமது கணிணி நிலை வட்டில் (Hard disk) எந்த மாதிரி கோப்புகள் உள்ளன என்பதை ஆவலுடன் பாப்போம். இதை தவிர நாம் தினமும் குறைந்தது ஒரு நாளைக்கு கீழே சொல்லிய செயலை அன்றாட உபயோகிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறோம். 
MyComputer --> C:/ or D:/ or so on... மேலும் நாம் நமது அன்றாட தினசரி கணிணி வேலை செய்ய உதவும் மென்பொருள்களை தேடி தேடி அதை சொடுக்குவோம். இந்த அத்தனை விசயங்களையும் மிகவும் அழகான, பொலிவான அம்சத்தில் நமக்கு எளிதாக பயன்ப்படும் வகையில்  அளிக்கிறது StandAlone Stack      என்ற மென்பொருள். இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். 
மென்பொருளை நிறுவியுடன் அதன் அமைப்பு பக்கத்தில் சென்று உங்களக்கு ஏற்றவாறு அமைப்பினை மாற்றி கொள்ளவும்.