Friday, April 23, 2010

அதீத கணிணி மோகத்தை கட்டுபடுத்தும் மென்பொருள் !

 கணிணியில் அதுவும் இணையத்தில் காலம் நேரம் பார்க்காமல் இரவு முழுவதும் உறங்காமல் ராக்கோழியாக உலவும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? இந்த கேள்விக்கு பதில் ஆம் என்று கூறும் அனைவருக்கும் உதவும் விதமாக எழுத பட்டதுதான் இந்த பதிவு. இன்றைய கணிணி யுகத்தில் உலகில் உள்ள பலதரப்பட்ட மக்கள் பிறருடன் தொடர்பு கொள்ளவும் , தங்களது அறிவு ஆற்றலை பெருக்கி கொள்ளவும் இணையத்தில் குறைந்தது ஒரு நாளைக்கு 15 மணி நேரங்கள் உலாவுகின்றனர். இதன் காரணமாக அவர்களது உணவு, உறக்கம் என அனைத்தையும் மெய்மறந்து விடுகின்றனர். பெரும்பாலும் பதிவுலகத்தில் உள்ளவர்களும், சமூக வலைத்தளங்களை உலவும் நண்பர்களும் இந்த விசயத்திற்கு சிறந்த எடுத்துகாட்டுகள்.   இவர்கள் அனைவருக்கும் உதவும் விதமாக அமைந்துதான் "Bed Time Help" என்ற மென்பொருள். 

இந்த மென்பொருள் நமது உறங்கும் நேரத்தை சரியாக நினைவு படுத்தி நம்மை உறங்க செல் என கட்டளை இடுகிறது. இந்த மென்பொருளின் அமைப்புகளில் சென்று நீங்கள் உறங்க செல்லும் நேரத்தை தேர்ந்தெடுத்து கொள்ளவும். பின்பு எவ்வளவு நேரதிருக்கு ஒரு முறை உங்களக்கு நினைவுபடுத்த வேண்டும் என்பதையும், உங்கள் உறங்கும் நேரம் வந்தவுடன் கணிணியின் இயக்கத்தை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதையும் தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்
                                                 

Saturday, April 17, 2010

டிவிட்டர் , FaceBook உலவுதலை எளிதாக்கும் TweetDeck !


டிவிட்டர் ,FaceBook போன்ற சமூக வலைத்தளங்களை சுற்றிதான் இன்றைய இணைய உலகமே இயங்கி வருகிறது என்று கூறினால் அது மிகையாகது. அந்த அளவிற்கு மக்களிடம் அதன் வரவேற்பும்,. அதன் மூலம் நாம் பெற கூடிய செய்தி தொடர்பும் மிகவும் அத்தியாவசிய அம்சமாகும். இந்த நிலையில் நாம் அனைவரும் நமது தினசரி வேலைகளிலும், நமது மற்ற இணைய தேடலாலும் தொடர்ந்து டிவிட்டர் ,FaceBook போன்ற தளங்களில் தொடர்ந்து வளம் வருவது என்பது கடினமான செயல் ஆகும். எனவே இதை புரிந்து கொண்ட TweetDeck என்ற மென்பொருள் நமது டிவிட்டர் மற்றும் FaceBook  வலைத்தளங்களை அவர்களது மென்பொருளில் ஒருங்கிணைத்து நமக்கு உதவி புரிகிறார்கள்.
இந்த சேவை மூலம் நாம் எந்தவொரு உலாவியும் இல்லாமலேயே நமது Desktop  மூலமாகவே நமது சமூக வலைத்தளங்களை பார்த்து கொள்ளலாம். இதை விட பெரிய உதவியாக இருப்பது நமக்கு ஏதனும் தகவல் வந்திருப்பின் இந்த மென்பொருள் நமக்கு ஒலி எழுப்பி தகவல் தருகிறது. இதானால் நமது மற்ற வேலைகள் எதுவும் பாதிக்காவண்ணம் நம்மால் செயல்பட உதவுகிறது.
இதனை தரவிறக்க இங்கே சொடுக்கவும்: http://www.tweetdeck.com/desktop/

Wednesday, April 7, 2010

வீடியோ கோப்பினை எளிதாக இணையத்தில் தரவிறக்கம் செய்ய !

இணையத்தில் எந்தவொரு விஷயம் மக்களிடம் பிரபலமாக இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக வீடியோ பற்றிய விசயங்களும், வீடியோ கோப்புகளை மக்கள் ரசிக்கும் பாங்கும் தினமும் அதிகரித்து வரும் ஒரு அம்சமாகும்.  இதை பறைசாற்றும் வகையில்  யூ டூப்'ல்  உறுப்பினர் எண்ணிக்கையும், யூ டூபிற்கு தினமும் மக்களிடம் கிடைக்கும் வரவேற்பும் சொல்லில் சொல்ல முடியாதா அளவிருக்கு அபரிமிதமான கணக்காகும்.  நம்மில் பலர் இணையத்தில் உலவும் சமயத்தில் நமக்கு பிடித்தமான வீடியோ கோப்பினை தரவிறக்கம் செய்யவும் ஆசை படுவோம். ஆனால் யூ டூப் போன்ற பல இணையதளங்களில் தரவிறக்கம் செய்யும் அம்சம் இருக்காது. இதனால் நாம் சில மென்பொருள்களை தேடி பிடித்து நமது கணிணியில் நிறுவி தரவிறக்கத்தை மேற்கொள்வோம். ஆனால், அது எதுவும் தேவை இல்லை. ஒரு சிறிய ADD ON மூலமே நாம் நமது FireFox உலாவியில் யூ டூப்'ல் இருக்கும் எந்தவொரு வீடியோ கோப்பினையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே இந்த ADD ON வீடியோ ரசிகர்களுக்கு மிக பெரிய விடிவாக இருக்கும். 
உங்கள் FireFox உலாவியில் இந்த ADD ON' ஐ நிறுவ இங்கே சொடுக்குவும். 

இதை நிறுவிய உடன் நீங்கள் யூ டூபில் பார்க்கும் எந்தவொரு வீடியோ கோப்பின் கீழயும்
சிவப்பு நிற தரவிறக்க குறியீடு தோன்றி, உங்களக்கு ஏற்ற வகையில் MP4 allathu FLV அல்லது  3GP  போன்ற கோப்பு வகைகளை தேர்ந்து எடுத்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 




Saturday, April 3, 2010

என் புருவத்தை உயரவைத்த Blogger !

Gloson - எனது புருவத்தை மட்டும் அல்ல உலகில் உள்ள அனைத்து தலைச்சிறந்த பதிவர்களையும் ஆச்சரியம் பட வைத்திருக்கும் பெயர். நாம் அனைவரும் குறைந்தது நமது பத்தாவது வயதில் கம்ப்யூட்டர் என்ற வார்த்தையை அறிந்து வைத்திருப்போம். அதே போல் கண்டிப்பாக அந்த வயதில் நமக்கு இணையத்தை பற்றியோ, வலை பதிவு என்ற விசயத்தை பற்றியோ தெரிந்து இருக்க சிறிது கூட வாய்ப்புகள் கிடையாது. ஆனால் கணிணியின் பரிணாம வளர்ச்சி காரணமாகவும், இணையத்தின் அபார முனேற்றதாலும் இன்றைய தலைமுறையினர் இந்த விசயங்களில் தலைசிறந்து விளங்குகின்றனர்.அவர்கள் இந்த சிறு வயதிலேயே இவ்வளவு விசயங்களையும், இணையத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் தெரிந்து வைத்திருப்பது நாளைய தலைமுறையின் வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.
அந்த வகையில் என்னை ஆச்சரிய பட வைத்த ஒரு சிறுவன்(வயதில் மட்டுமே!) Gloson.
மலேசியாவில் வசிக்கும் இந்த சிறுவன் தனது பத்தாவது வயதில் இருந்து ப்ளாக் எழுதுவதாகவும், தனக்கு கவிதை எழுதவது மிகவும் பிடிக்கும் அன்றும் தனது முகப்பு பக்கத்தில் தெரிவித்து உள்ளான். சுமார் 4000 RSS சந்தாதாரர்களை பெற்று இருக்கும் இவனது ப்ளாக் டிவிட்டர், ப்ளோக்கிங், இணையம், கவிதை என பல துறைகளை அலசுகிறது. மிகவும் ரசிக்க வைக்கும் ஒரு சிறுவன். 


Thursday, April 1, 2010

Veoh Player, YouTube'ற்கு மாற்றா அல்லது போட்டியா?

இணைய உலகில் உலவும் அனைத்து நபர்களுக்கும் வீடியோ என்ற சொல்லை சொன்ன மறு வினாடியே அவர்கள் தங்கள் உலாவியில் சொடுக்கும் முதன்மையான தளம் யூ டூபாகதான் இருக்கும். நாம் நமது எண்ணதிருக்கு ஏற்ப நமக்கு வேண்டியே வீடியோ காட்சிகளை எந்த நேரத்திலும் சுலபமாக தேர்வு செய்து பார்க்கும் அளவிற்கு யூ டூபின் வளர்ச்சி அபரிமிதமானது. இந்த நிலைக்கு தன்னை இந்த இணைய உலகத்தில் ஒரு அங்கமாக இணைத்து கொண்டிருக்கும் யூ டூபின் சாதனை மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் ஆகும். இது வரை இந்த யூ டூப் என்ற உயர்ந்து வளர்ந்த ஒரு பெரிய சக்தியின் முன்பு பல சிறிய சிறிய வீடியோ தளங்கள் அவ்வபோது போட்டியிடுவது நமக்கு தெரிந்ததே. சிறிது காலத்திருக்கு அந்த தளங்களின் தாக்கம் இருந்து விட்டு மீண்டும் நாம் அனைவரும் யூ டூப் நோக்கி செல்வது வாடிக்கையான ஒரு விசயம்தான். 
ஆனால் 2007 'ன் இறுதியில் தொடங்கபட்டு பல பயனிட்டாளர்களை கணிசமாக தங்கள் பக்கம் திசை திருப்பி கொண்டு இருக்கும் VEOH Player இந்த கணிணி யுகத்தில் கவனிக்க பட வேண்டிய ஒரு அம்சமாகும். யூ டூபில் நம்மால் செய்ய முடியாத தரவிறக்கம் என்ற விசயத்தை இந்த VEOH Player மூலம் எளிதாக செய முடிகிறது. அது மட்டும் அல்லாமல் நீங்கள் விரும்பும் அனைத்து வீடியோ கோப்புகளும் யூ டூபில் இருப்பதை விட இந்த தளத்தில் நிறைய பார்க்க முடிகிறது. இந்த அனைத்து அம்சங்களையும் கொண்டு உள்ள இந்த Veoh பிளேயர் வீடியோகளை மிகவும் தெளிவாக பார்க்க அவர்கள் Veoh பிளேயர் என்ற ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்ய சொல்கிறார்கள். வெறும் 5 MB அளவே உள்ள இந்த மென்பொருள் மூலம் நமக்கு Veoh பிளேயர் சார்ந்த பல அம்சங்கள் கிடைகிறது. நீங்கள் உங்கள் Twiitter அல்லது Facebook கணக்கினை கொண்டு இந்த தளத்தில் உறுப்பினர் ஆகலாம். இந்த தளம் YouTube'ற்கு மாற்றா அல்லது போட்டியா? என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!
தளத்தின் முகவரி: http://www.veoh.com/
மென்பொருளை தரவிறக்க : http://www.veoh.com/download