Tuesday, February 16, 2010

தமிழ் பதிவர்களுக்கு மகுடம் சூட்டிய NDTV- HINDU'வின் "Byte It!" நிகழ்ச்சி.

என் செல்லமான டிவிட்டர் நாய்குட்டி!

எப்பொதுமே ஒரு பிரபலமான வாசகத்தை நாம் நினைவில் வைத்திருப்போம். எனக்கு இந்த விசயத்தை படித்த பின்பு ஞாபகத்துக்கு வந்த வாசகம் "பிரேக் தி ரூல்ஸ்(Break the Rules)". ஆம் இதுவரை மனிதர்கள் மட்டும் தான் டிவிட்டரில் கலக்கி கொண்டு இருந்தார்கள். "ஏன்? எங்களால் டிவிட்ஸ் அனுப்ப முடியாதா?" என இனிமேல் உங்கள் செல்ல பிராணியான நாய்களும் கேட்க போகிறது. ஆம், இனிமேல் உங்கள் செல்ல பிராணிகளும் டிவிட்டரில் கலக்கலாம் என சொல்லி நாய்களின் மடியில் பால் வார்த்து உள்ளார்கள் "பப்பி டிவிட்ஸ்(Puppy Tweets) என்ற நிறுவனம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் முதலில் உங்கள் செல்ல நாயுக்கு ஒரு டிவிட்டர் கணக்கை தொடங்குங்கள். பின்பு பப்பி டிவிட்டர் காலரை வாங்கி உங்கள் நாயின் கழுத்தில் மாட்டி விடுங்கள். இப்பொது தான், இந்த இடத்தில தொழில் நுட்பத்தை உபயோகிகிரர்கள். உங்கள் நாயின் கழுத்தில் உள்ள காலரில் இருக்கும் சென்சார் உங்கள் நாயின் மனநிலைக்கு ஏற்ப உங்கள் கணிணியுடன் இணைக்க பட்டிருக்கும் Wi-Fi' க்கு தகவல் தரும். அதில் இருக்கும் தகவல்கள் ஏற்கனேவே சேமித்து வைக்க பட்டிருக்கும் டிவிட்சை மென்பொருளின் உதவியுடன் உங்கள் நாயின் டிவிட்டர் கணக்கில் இருந்து டிவிட்ஸ் அனுப்ப படும். இனிமேல் தினமும் உங்கள் நாயின் மிது ஒரு கண் வைத்து கொள்ளுங்கள். உங்களைவிட உங்கள் நாய் அதிக டிவிட்டர் ரசிகர்களை கவர்ந்து விட போகிறது.சில செல்ல நாய்களின் டிவிட்டர் கணக்குகள்:
http://twitter.com/Puppy_Tweet

Monday, February 15, 2010

டிவிட்டரில் உங்களின் ரேங்க் என்ன?

இதோ மீண்டும் நம் வாழ்கையில் வந்து விட்டது ரேங்க் கார்டு. நாம் பள்ளியில் படிக்கும் போது ஒவ்வொரு தேர்வு முடிந்தவுடன் நகத்தை கடித்து கொண்டே " ஐயோ! நமது ரேங்க் என்னவாக  இருக்குமோ"  என்று பயந்து கொண்டே இருப்போம். ஒரு வழியாக நாம் நல்ல ரேங்க் வாங்கிவிட்டால், நல்ல வேளை தப்பித்து  விட்டோம் என பெரு மூச்சு விடுவோம். பெயில் ஆகிவிட்டால் அவ்வளவுதான், எப்படி நமது அப்பாவின் கையெழுத்தை போடுவது என்று முயற்சி செய்வோம். ஒரு வழியாக அடித்து பிடித்து நல்ல படியாக படித்து பள்ளி, கல்லூரி என முடித்து ஒரு வேலையில் அழகாக பயணித்து கொண்டு வாழ்க்யை ஒர்குட், டிவிட்டர் என ஜாலியாக அனுபவித்து கொண்டு இருக்கிறோம். இதோ இங்கேயும் வந்து விட்டது ரேங்க் முறை. எப்பொதுமே நாம் நல்ல ரேங்க் வாங்க வேண்டும் என ஆசை படுவோம். இந்த ரேங்க் முறையை புரிந்த கொண்ட ஒரு இனைய தளம் நாம் டிவிட்டரில் எத்தனாவது ராங்கில் இருக்கிறோம் என பட்டியல் இடுகிறது. மிகவும் துல்லியமாக நமது டிவிட்ஸ், நாம் டிவிட்டரில் இருக்கும் நேரம், நாம் எவ்வளவு நேரத்திருக்கு ஒரு முறை டிவிட்ஸ் அனுப்புகிறோம் என பலவற்றை கொண்டு நமது ராங்கை பட்டியல் இடுகிறது http://twitter.grader.com/ என்ற இணையதளம். அது மட்டும் அல்லாமல் உலகத்தில் முதல் 100  இடங்களை பிடித்துள்ள டிவிட்டேரின் பிரபலமானவர்களின் பட்டியலும் வெளியிட்டு உள்ளார்கள். மேலும் இந்த தளம் எப்படி இயங்குகிறது என்ற அறிவியல் தொழில் நுட்பத்தையும் விலக்கி உள்ளார்கள்.
சும்மா ஒரு முறை உங்களது டிவிட்டர் ரேங்க்'ஐ நகம் கடித்து கொண்டு பார்த்து விட்டு வாருங்கள்.

Saturday, February 13, 2010

பபுள் டிவிட் (Bubble Tweet)


டிவிட்டரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் யோசித்து புதிய விசயங்களை மக்களுக்கு எடுத்து செல்கின்றனர். அதுவும் டிவிட்டரில் ஏதேனும் புதிய வரவுகள் வந்தால் மக்கள் அதை சிவப்பு கம்பளி விரித்து வரவேற்கின்றனர். அந்த வகையில் வந்த இன்னொரு விஷயம்தான் பபுள் டிவிட். இது கண்டிப்பாக மக்களிடம் இல்லை இல்லை டிவிப்ளிடம் அதிக வரவேற்பு பெற்று வரும் ஒரு அற்புதமான் கண்டுபிடிப்பு. இதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா? இதுவரை டிவிட்டரில் நாம் டெக்ஸ்ட் (Text) என்று சொல்ல படும் எழுத்து வடிவத்தை மட்டுமே உபயோகித்து வந்தோம். இப்பொது இதற்கு மாற்றாக வீடியோ முறையிலும் டிவிட் செய்ய முடியும் என சொல்லுவதுதான் பபுள் டிவிட். சரி இந்த பபுள் டிவிட் எப்படி இயங்குகிறது என்று பார்போம். முதலில் http://www.bubbletweet.com/ என்ற இணைய முகவரிக்கு செல்லுங்கள். அங்கே உங்களது டிவிட்டர் பெயரை கொடுத்து எந்த விதத்தில் அதாவது புதிதாக உங்கள் வெப் காமில் இருந்து வீடியோவை பதிக்க போகிறிர்களா அல்லது ஏற்கனவே இருக்கும் வீடியோவை பதிக்க போகிறிர்களா என்று சொல்லிவிட்டு யங்கள் வீடியோவை பதியுங்கள். வெப் காம் என்றால் தானாக உங்கள் மடி கணிணியின் வெப் காமை உபயோகித்து 30 நொடிகள் பேசுங்கள். இந்த கட்டத்தை தாண்டியவுடன் உங்களுக்கு அவர்கள் ஒரு லிங்கை தருவார்கள். அந்த லிங்கில் உங்களது வீடியோ இருக்கும். இப்பொது அதை உங்கள் டிவிட்டர் கணக்கில் உங்கள் நண்பர்களுக்கு டிவிட்டுங்க. இந்த சேவை முழுதும் இலவசம். சரி, எதற்கு இதன் பெயர் பபுள் டிவிட் என்று குழப்பமா? அது ஒன்னும் இல்லை உங்களது வீடியோ பபுள் வடிவத்தில் ஒளிபரபாகும். அவ்வளவுதான். இதில் ஏதனும் குழப்பம் இருந்தால் இந்த பதிவில் கேளுங்கள். பதில் அளிக்கிறேன்.

♥ டிவிட்டரில் காதலர் தின கொண்டாட்டம் ♥



இதோ வந்து விட்டது காதலர் தினம். சிலருக்கு இந்த நாள் தெய்விகமான நாள், சிலருக்கு இந்த நாளும் மற்றொரு நாள்.. எது எப்படியோ இருக்கட்டும். காதலர் தினத்தை கொண்டாட பலர் பல வழிகளை யோசித்து கொண்டு இருப்பார்கள். டிவிட்டேரின் அருமையை உணர்ந்த பல கணினி மென்பொருள் ஆர்வலர்கள் தங்களது காதலர் தின யோசனையை டிவிட்டேரை நோக்கி திருப்பி உள்ளனர். ஆம், SweetHearts என்ற மென்பொருள் உலகில் உள்ள காதலர்களை அழைத்து தங்களது மென்பொருள் மூலம் உங்கள் ஜோடிக்கு உங்களது அன்பை இதய வடிவில் டிவிட்டரில் அனுப்புங்கள் என்று கூறுகிறது. SweetHearts' இல் அப்படி என்னதான் இருக்கிறது என்று சென்று பார்க்கையில் அங்கு அவர்கள் நமது டிவிட்டர் கணக்கை தொடர்பு கொண்டு அவர்களது மென்பொருள் மூலம் ஐந்து இதயத்தில் நமது ஜோடிக்கான வாழ்த்தை பதிக்க சொல்லுகிறார்கள். முடித்தவுடன் தானாக நமது டிவிட்டரில் இருக்கும் ஜோடிக்கு அதை அனுப்பி வைத்து நம் காதலையும் அன்பையும் அவர்களுக்கு வெளிபடுத்த உதுவுகிரர்கள். உங்களுக்கென ஒரு காதலியோ / காதலனோ இருந்தால் அவர்களுக்கு உங்கள் வாழ்த்துகளை இதயம் மூலம் தெரிய படுத்துங்கள். ஒருவேளை உங்களுக்கு காதலியோ / காதலனோ இல்லை என்றாலும் பரவாயில்லை சும்மா ஒரு தடவை அந்த தளத்துக்கு சென்று அந்த தொழில்நுட்பத்தை பார்த்து ரசித்து வாருங்கள்.

டிவிட்டரில் ஹோவர் கார்ட்ஸ் (Hover Cards)


ஹோவர் கார்ட்ஸ் (Hover Cards), டிவிட்டரில் புதிதாக சேர்க்க பட்டுள்ள ஒரு வசதி. நாம் ஒருவரது பெயரின் பக்கத்திலோ, அவரது புகைபடத்தின் மேலோ நமது மௌசை கொண்டு செல்லும் பொது நமக்கு அவரை பற்றிய விபரங்களை இன்னொரு புது இணையதிருக்கு செல்லாமலே அதே இடத்தில தனிஒரு பெட்டியில் அழகாகவும் புதுமையாகவும் காண்பிக்கிறது. இந்த வசதி எப்படி ஒருவருக்கு உபயோகமாக இருக்கிறது என்று கிழே உள்ள எடுத்துகாட்டை பாருங்கள். நாம் ஒரு பிரபலமான நபரை டிவிட்டரில் பின்தொடர்ந்து கொண்டுயருகிறோம். அவர் சில கருத்துகளை பகிர்ந்து அதை மக்களின் முன் வைத்து கருத்து கேட்கிறார். அப்போது ஒரு நபர் ஒரு நல்ல கருத்தை நம் பிரபலத்திடம் டிவிட்டாக அனுப்புகிறார். அது ஒரு அருமையான கருத்தாக இருப்பதால் நம் பிரபலமும் அதை retweet செய்கிறார். retweet செய்வதன் மூலம் நம் பிரபலத்தை பின் தொடரும் அனைவருக்கும் டிவிட்டாக செல்லும். அப்போது நமக்கு நம் பிரபலம் ஒருவரின் டிவிட்டை retweet செய்திருக்கிறார் என்று தெரிந்து அந்த நபரை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படும். இந்த சமயத்தில்தான் நமக்கு Hover Cards உதவி புரிகிறது. நாம் அவரை பற்றி அவரது பெயரிலோ, புகைப்படத்திலோ நமது மௌசை வைக்கும் பொது காண்பிக்க படும் விவரம்தான் Hover கார்ட்ஸ். மேலும் அதை பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்புர்வமான டிவிட்டர் இணையத்தில் பார்க்கவும்.

உங்கள் புகைப்படத்தை கலைநயமாக மாற்ற!






உலகில் உள்ள அனைவருக்குமே பொதுவாக ஒரு விசயத்தில் அலாதியான மகிழ்ச்சியை ஏற்படுத்துவது நமது புகைப்படத்தை பார்த்து ரசிப்பது. நமது பழைய கால புகைப்படங்களை இப்பொது பார்த்தாலும் நமக்கு மனசுக்குள் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் கடந்த காலத்தை நோக்கி விரியும். அது மட்டும் அல்லாமல் இந்த நவீன உலகத்தில் நாம் அனைவரும கண்டிப்பாக ஆர்குட், face book, flicker என பல சமுதாய வலைபின்னல்களில் உறுபினராக இருக்கிறோம். அதில் கண்டிப்பாக நம் படத்தை பிரசுரிக்க ஆசை படுவோம். அனால் பாதுகாப்பு கருதி சிலர் தங்களது படத்தை பொதுவாக பிரசுரிக்க பயபடுவார்கள். அவர்களக்கும், புகை பட பிரியர்களுக்கும் மிகவும் உதவும் வகையில் இருக்கும் வலை பின்னல்தான் Be Funky.com. நாம் அனைவருமே போடோ சாபில்(PhotoShop) வல்லுனுர்கள் அல்ல. எனவே இந்த funky தளம் நமக்கு மிகவும் உதவியாக நம் படத்தை பல பரிமாணங்களில், அழகிய மாற்றத்துடன் கண் இமைக்கும் நேரத்தில் மாற்றி தருகிறது. இங்க எனது நண்பன் ஒருவனின் படத்தை Funky தளத்தில் மாற்றிய விதத்தை அளித்துளேன். கண்டிப்பாக இந்த தளம் புகைப்பட பிரியர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி தரும் என்பதில் எந்த எதிர் கருத்தும் இல்லை.

Thursday, February 11, 2010

டிவிட்டரில் - ஆட்டோ டிவிடிங்..








டிவிட்டர் பயன்படுத்தும் அனைவர்க்கும் அதன் அருமை பெருமைகள் நன்றாக தெரிந்து இருக்கும். டிவிட்டரில் ஒருவர் அதிகமாக பிரபலமாவதும் ஆகாததும் அவர்கள் டிவிட்டரில் எவ்வளவு ட்வீட்ஸ் பதிகிறார்கள் என்பதை பொறுத்தே அமைகிறது. பிரபலமான சினிமா துறையை சேர்ந்தவர்களும், பத்திரிகை துறையை சேர்ந்தவர்களும் மிக மிக பிரபலம் அடைவது அவர்கள் ஒரு நாளுக்கு குறைந்தது ௦50-100 ட்வீட்ஸ் அளிப்பதால் மட்டுமே. அவர்களுக்கு அதன் மூலம் ஒரு ஆதாயமும், அதற்கான நேரமும் இருக்கிறது. ஆனால் நம்மில் பலருக்கு டிவிட்டரில் நிறைய செய்திகளை சொல்ல வேண்டும் என ஆசை இருக்கிறது ஆனால் நேரம்தான் இல்லை. இந்த குறையை திர்பதர்க்காகவே நமக்கு கிடைத்துள்ள சேவைதான் "AutoTweeting ". இந்த மென்பொருளை உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்துகொண்டு அதில் சில அங்கங்களை மாற்றினால் போதும், நீங்கள் இல்லாமலேயே உங்கள் டிவிட்டர் கணக்கில் தானாக ட்வீட்ஸ் விழ ஆரம்பித்துவிடும். இதோ இந்த சேவை பற்றிய செய்முறை விளக்கங்கள்:
01 . பதிவிறக்கம் செய்து முடித்தவுடன் உங்கள் கணினியில் அதை நிறுவி கொள்ளுங்கள்.
02. பின்பு இங்கே கொடுத்துள படங்களில் சொல்லி உள்ளது போல் செய்தாலே போதும்.
ஆனால் Trial Version வைத்து ஒரு நாளைக்கு 10 ட்விட்சை மட்டுமே அனுப்ப முடியும். ஆனால் Full version வாங்கினால் எல்லை இல்லா கொண்டாட்டம்தான்.




Saturday, February 6, 2010

IPL on YouTube


இதோ! இன்னும் சரியாக ஒரு மாதம் தான் இருக்கிறது திருவிழாவிற்கு. திருவிழா ஆரம்பித்து விட்டால் அவ்வளவு தான் இந்தியா முழுவதும் சரியாக ஒன்றரை மாதத்திற்கு ஊர் முழுவதும் அதை பற்றித்தான் பேச்சாக மூச்சாக இருக்க போகிறது. அந்த பிரமாண்ட திருவிழா ஒரு ஆடம்பர திருவிழாவாகவும், கட்டு கட்டாக கரன்சி ரூபாய் நோட்டுகள் புரளும் விழாவாக இருக்க போகிறது. இந்நேரம் அந்த விழா என்னவென்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் அவ்வளவுதான் உங்களை இந்த நாட்டை விட்டே கடத்தும் அளவிற்கு தண்டனை புரிந்தது போல் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் உங்களை சுற்றி இருப்பவர்கள். ஆம் இன்னும் சில தினங்களில் தொடங்க போகிறது ஐ. பி. எல் 3 . மீண்டும் இந்தியாவிற்குள் அடி எடுத்து வைக்கிறது இந்தாண்டு ஐ. பி. எல். இந்த முறை ஒரு கட்டம் தாண்டி சென்று இணையத்தில் வீடியோ ஜாம்பவாணன் யு டூபை தங்களடுன் இணைத்து கொண்டு உள்ளார்கள். எனவே இம்முறை ஒவ்வொரு போட்டியும் நேரடியாக யு டுபில் பார்க்கலாம். இது மட்டும் அல்லாமல் அணைத்து பெரிய நகரங்களின் திரை அரங்குகளிலும் போட்டிகளை காண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. எனேவே நீங்களும் உங்களை தயார் படுத்தி கொள்ளுங்கள் இந்த பிரமாண்ட திருவிழாவில் நனைய.....
http://www.youtube.com/ipl
http://twitter.com/IPL
http://www.iplt20.com/index.php

Wednesday, February 3, 2010

டிவிட்டரில் படம் காட்டும் படைப்பாளிகள் :)


இந்த பதிப்பின் தலைப்பை பார்த்தவுடன் ஏதோ திரைக்கு வந்து சில மாதங்களே ஆன படத்தை நீங்கள் பார்க்க போகிறிர்கள் என நினைத்து விட வேண்டாம். இது திரைப்பட பிரபலங்கள் தாங்கள் நடிக்கும் படங்களை பற்றியும், தாங்கள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் சுவாரசியமானஅனுபவங்களை பற்றியும் டிவிட்டரில் நொடிக்கு நொடி தகவலை அளிக்கும் செய்தி பற்றிய பதிவு. ஆம், நமக்கு சினிமா பிரபலங்களின் கிசு கிசு'வை பற்றி பேசுவதும் கேட்பதும் அல்வா சாப்பிடுவது போல் சுவாரசியமானது, அதிலும் சினிமா பிரபலங்கள் தாங்களாகவே முன் வந்து அவர்களது தினசரி வாழ்க்கை'யை பற்றிசொன்னால் கேட்கவா வேண்டும்... அது எவ்வளவு குஷியாக இருக்கும். அனால் டிவிட்டரை சினிமா பிரபலங்கள் வேறு விதமாக, அதுவும் தங்களது படத்தை பற்றி விளம்பரப்படுத்தவும், மக்களின் ஆர்வத்தை தூண்டி தங்களது படத்தை மக்களிடம் மிக விரைவாக கொண்டு செல்லும் ஒரு கருவியாக நினைகிறார்கள். அவர்களது இந்த வியாபாரயுக்தி மிகவும் பயன் அளிகக்குடியதாகவே இருந்து வருகிறது. இதனால் ஒரு திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே மக்களிடம் அந்தப்படத்தை பற்றிய ஆவலை அவர்கள் தூண்டுகிறார்கள். இதனால் அவர்களுக்கு வியாபாரமும் நன்றாக இருக்கிறது, மக்களிடம் அமோக வரவேற்பும் கிடைக்கிறது. இதுவரை டிவிட்டர்'ல் பல பிரபலங்கள் அடி எடுத்து வைத்து ஒவ்வவோருவரும் 100000 மேலாக ரசிகர்களை பெற்று உள்ளனர். வழக்கம்போல் இதிலும் ஹிந்தி திரை உலகம் முந்திக்கொண்டது. இன்னும் டிவிட்டர் தமிழ் திரை உலகில் அவள்ளவு சிறப்பாக உபயோகிக்க ஆரம்பிக்கவில்லை என்பது யோசிக்க வைக்கிறது. சில பத்திரிகையாளர்களின் டிவிட்டர் முகவரிக்கு : http://twitter.com/#/list/Vasanth_/cinemas

Tuesday, February 2, 2010

டிவிட்டரில் Journalism.....


டிவிட்டர்'ன் அருமை பெருமைகள் பற்றி அனைவரும் அறிந்ததே! நாம் விரல் சொடுக்கும் நொடிக்குள் ஆயிரம் ஆயிரம் டிவிட்சை(Tweets) டிவிப்லஸ்(Tweeples - People in Twitter)விவாதித்து'ம் பேசிக்கொண்டு இருப்பார்கள். உலகின் உள்ள அனைத்து மூளை முடுக்குகளில் இருந்தும் செய்திகள் பறந்து கொண்டு இருக்கின்றன. இதை நன்கு உணர்ந்த நமது இந்திய நாட்டின் பத்திரிகையாளர்கள் பலர் தங்களையும் டிவிட்டர்'ல் இணைத்து கொண்டு செய்திகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் பொது மக்களிடம் நேரடியாக ஒரு விஷயத்தை விவாதிக்க முடிகிறது. சாதாரண பாமர மக்களின் கருத்து முதல் பலரது கருத்துகளை பதிவு செய்ய டிவிட்டர் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது. காலை முதல் மாலை வரை டிவிட்டர்'ல் மக்களின் கருத்துகளை கேட்டு இரவு தங்களது பிரத்தியேக நிகழ்ச்சியில்(Prime Shows) விவாதிகின்றனர். அவர்களுக்கு வந்த சிறந்த டிவிட்சை(Tweets) அவர்களது நிகழ்ச்சியுளும் ஓட விடுகின்றனர். ஆனால் இத்தகைய அருமையான சேவையை பெரும்பாலும் ஆங்கில செய்தி தொலைகாட்சிகளில் மட்டும் இதுவரை செயல் படுத்தி உள்ளனர். இந்த சேவையை ஏன் இன்னும் நமது தமிழ் தொலைகாட்சி நண்பர்கள் உபயோகிக்க ஆரம்பிக்கவில்லை என ஆதங்கமாக உள்ளது. இந்த இவணின் ஆதங்கம் என்று தீர போகிறது? சில பத்திரிகையாளர்களின் டிவிட்டர் முகவரிக்கு : http://twitter.com/#/list/Vasanth_/ஜௌர்நலிஸ்த்ஸ