Sunday, August 1, 2010

FishBowl - Facebook 'ற்கான புதிய டெஸ்க்டாப் மென்பொருள்

நீங்கள் தினமும் உங்களது நாளை சில நேரங்கள் Facebook 'இல் செலவு செய்பவரா அல்லது Facebook என்னும் கடலில் மூழ்கி திளைப்பவரா, அப்படியெனில் இந்த பதிவு கண்டிப்பாக  உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எப்போதும் வழக்கமான Facebook முகப்பு  பக்கத்தில் இருக்கும் விளம்பரங்கள், கச கசவென இருக்கும் பக்கங்களில் இருந்து தெளிவான glossy லுக் எனப்படும் தெளிவான அம்சத்தில் பக்கங்களை பார்க்கவும், நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும் உங்களுக்குக்காக வந்துள்ள  டெஸ்க்டாப் மென்பொருள்தான் FishBowl . இந்த மென்பொருள் உங்கள் டெஸ்க்டாப்பில் தனியொரு மென்பொருளாக வேலை செய்கிறது. எனவே நீங்கள் எந்தவொரு உலவி இல்லாமல் facebook இல் உலவலாம். கண்டிப்பாக இந்த மென்பொருள் facebook இன் புதிய பரிமாணமாக விளங்க போகிறது. இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். இந்த மென்பொருள் தற்சமயம்  Beta version ஆக வருகிறது. நிறுவி பார்த்து உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.மேலும் இதில் பல அழகிய அம்சங்கள் நம்மை கவர்கிறது. நாம் எந்தவொரு பக்கத்தையும் Linux போல் ஜூம் இன், ஜூம் அவுட் செய்து பார்க்கலாம். நமக்கு வரும் செய்திகள், நண்பர்கள் அழைப்பு என பல அம்சங்களை தெளிவாக காண்பிக்க செய்கிறார்கள். நிச்சயம் இது  Facebook இன்  ஒரு புது அனுபவமாக இருக்கும். 






Monday, May 24, 2010

வீடியோ கோப்பினை டெஸ்க்டாப் பின்னணியாக வைக்க முடியுமா?


இந்த கேள்விக்கு பதில் நூற்றுக்கு நூறு ஆம்.  இதுவரை கணிணி பயன்படுத்தி வரும் நாம் அனைவரும் டெஸ்க்டாப் பின்னணியாக நம் மனதிருக்கு பிடித்தமான புகைப்படங்களையோ, இணையத்தில் இருக்கும் சிறந்த கண்ணை கவரும் அழகிய படங்களையோ நமது டெஸ்க்டாப்இன் முகப்பு பக்கத்தில் வைத்து ரசித்து வந்திருக்கிறோம். இதை நாம் "Static Content" என கூறலாம். இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் Windows 7 இயங்கு தளத்தில் புகைப்படங்களை தானாக நேர இடைவெளியில் மாற்றும் வசதி உள்ளது. இருந்தாலும் இந்த வசதியையும் நாம் "Static Content" என்றுதான் கூற வேண்டும். 

எவ்வளவு நாட்கள் நாம் இந்த பழைய வசதியை வைத்து கொண்டு இருப்பது? புதிதாக அதுவும் நமது டெஸ்க்டாப் முகப்பு பக்கம் பிரமிப்பாக தெரிய வேண்டாமா? இந்த கேள்விகளை எல்லாம் மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டு இருக்கும் மென்பொருள் தான் "DreamScene Activator". இந்த மென்பொருளை கொண்டு நாம் நமது கணிணி முகப்பு பக்கத்தில் வீடியோ கோப்பினை சுவர்படமாக ஓட விடமுடியும். இதனால் நமது கணிணிக்கு புதியதொரு பொலிவு கிடைப்பது மிகவும் உண்மை. 




இந்த  மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். இந்த தளத்தில் சொல்லி உள்ளது போல் நிறுவி கொள்ளவும். மேலும் விவரங்களக்கு இந்த வீடியோ கோப்பினை பார்க்கவும். http://www.youtube.com/watch?v=lex9OB-leFc&feature=related. ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாள் பின்னூட்டம் இடவும். 

Monday, May 17, 2010

உலகில் தலைச்சிறந்த 100 டிவிட்டர் நகரங்கள்!

டிவிட்டர் பறவை தனது எல்லைகளை தாண்டி உலகில் உள்ள அனைத்து நகரங்களக்கும் பயணித்து வருகிறது. உலகில் உள்ள அனைத்து மக்களும் சரி டிவிடேரின் அருமைகளை புரிந்து வருகின்றனர். இன்றைய நிலையில் அதுவும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அசுர பாய்ச்சலக்கு டிவிட்டேரும் ஒரு பெரிய துணையாக இருந்து வருகிறது. சமிபத்தில் டிவிட்டர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் உலகில் உள்ள எந்தெந்த நகரங்கள் டிவிட்டேரை அதிகஅளவில் பயன்படுத்துகிறது என வெளியிட்டுள்ளது. 

இந்த அறிக்கையின் படி உள்ள நகரங்களை பார்த்தாலே நமக்கு எளிதில் அந்த நகரத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி எளிதாக புரிந்துவிடும். தற்போது உள்ள நிலையில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள நாடுகள் :
  • லண்டன்    
  • லாஸ் அன்ஜெலேஸ் 
  • சிகாகோ  
நமது இந்திய நகரங்களும் முதல் 100 இடங்களுக்குள் இருக்கிறது. எந்தந்தே நகரங்கள் என்று யூகிக்க தேவையில்லை. நமது நாட்டின் முக்கிய தொழில்நுட்ப நகரங்கள் மட்டும் தான் இடம் பெற்று உள்ளது.   அதன் பட்டியல் இதோ;

பெங்களூர் (23)
மும்பை (27)
டெல்லி (46)
சென்னை (58)
ஹைதராபாத் (77)
புனே (83)

முழு பட்டியல் இதோ : http://twitter.grader.com/top/cities

Friday, May 7, 2010

உங்கள் டெஸ்க்டாப் 3D'யில் புதுப்பொலிவு பெற!


உங்கள் கணிணியோ, அல்லது மடிக்கணினியோ எதுவாக இருந்தாலும் சரி முதலில் நாம் அழகு படுத்த நினைக்கும் இடம் நமது டெஸ்க்டாப். நாம் அடிக்கடி உபயோகப்படுத்தும் மென்பொருள் ஆகட்டும், கோப்புகள் ஆகட்டும் நமக்கு எதுவாக இருக்கா அனைத்தையும் நமது டெஸ்க்டாப்பில் கிடத்தி வைப்போம். சில சமயம் நிறைய கோப்புகள் இணைந்து நமது டெஸ்க்டாப் மிகவும் கச கசவென்று ஆகிவிடும். நாம் நினைக்கும் கோப்பினை எடுப்பது இன்னும் சிரமமாக மாறிவிடும். எனவே இந்த பிரச்சனைகளை தீர்க்க வந்துள்ள மென்பொருள் தான் BumpTop. ( இந்த மென்பொருள் பற்றிய கூடுதல் தகவல் இந்த பதிவின் இறுதியில்).



இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே சொடுக்குவும். மற்ற டெஸ்க்டாப் மென்பொருள் போன்றுதான் இந்த மென்பொருளும் இருக்க போகிறது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிகொள்ளுங்கள். ஆம் இது முழுவதும் 3D தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மென்பொருள். நீங்கள் உங்களது டெஸ்க்டாப் கோப்பினை கொண்டு எந்தவொரு இடத்தில் வேண்டுமானால் வைத்து கொள்ளலாம். பெரிதாக்கலாம், சிறிதாக்கலாம். பிரிவின் அடிபடையில் அடுக்கி வைக்கலாம். இதை பற்றி பேசுவதை விட உபயோகித்து பாருங்கள். இதை பற்றிய வீடியோ பதிவு: http://www.youtube.com/watch?v=Ntg1Gpgjk-A&feature=player_embedded#! . 
இந்த மென்பொருள் பற்றிய கூடுதல் தகவல்: இந்த மென்பொருளின் சேவை மற்றும், அதன் அற்புதங்களை கண்டு  கடந்த வாரம் கூகிள் நிறுவனம் இதை  வாங்கி விட்டது. 


கணிணித்துறையின் கற்பனை களஞ்சியம் !

உலகில் உள்ள எந்தவொரு மென்பொருள் சாதனையாளர்கள் ஆகட்டும், ஏன் எந்தவொரு துறையின் சாதனையாளர்கள் ஆகட்டும் அவர்களது வெற்றியின் காரணம் என்னவென்று நீங்கள் யோசித்து பார்த்தால் உங்களக்கு கிடைக்கும் பதில் அவர்களது கடின உழைப்பு, விடா முயற்சி என்று பல காரணங்கள் சொல்லலாம், ஆனால் அதை விட அவர்களது வெற்றிக்கு முதல் காரணம் அவர்கள் மனதில் விதைத்த அந்த முதல் துளி யோசனை / கற்பனை  தான். அவர்களிடம் எந்தவொரு கற்பனையும் இல்லாமல் இருந்திருந்தால் அவர்களது கடின உழைப்பும், விடா முயற்சியும் அவர்களுக்கு வெற்றி தந்திருக்க வாய்ப்பு சிறிதளவும் இல்லை. இதை நன்கு உணர்ந்த பல திறமைசாலிகள் தங்களது கற்பனைக்கு உருவம் கொடுத்து, அதற்க்கு உயிர் கொடுத்து தங்களது வாழ்கையில் நல்லதொரு நிலைக்கு தங்களை உயர்த்தி கொள்கின்றனர். சரி, என்னிடம் யோசனைகள் அவ்வளவு இல்லையே என்று கவலை படுகிறர்களா? கவலை வேண்டாம், இதோ யோசனைகளின் களஞ்சியமாக விளங்குகிறது TED. 

இந்த தளத்தில் பல துறையை சேர்ந்த வல்லுனர்கள் தங்களது கற்பனையை செயலாக மாற்றிய விதத்தை பற்றி பேசுகிறார்கள். மிகவும் ரசிக்கும் படியான இணையத்தளம். 

Monday, May 3, 2010

கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons.



கணிணி பயன்படுத்தும் அனைவரும் தங்களது மனதிற்கு பிடித்த உலாவியை கணிணியில் நிறுவி இணையதளங்களை உலா வருகின்றனர். தற்போது பல மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று இணையத்தில் ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் உலாவி எது என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அனேகமாக இந்த பதிவை கூட நீங்கள் கூகிள் க்ரோம் உலாவியை பயன்படுத்தி படித்து கொண்டிருக்கலாம். இந்த பதிவு  கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons பற்றியது. 





01. கூகிள் மெயில்: இந்த கூடுதல் வசதி மூலம் நாம் நமது உலாவியை கொண்டு நமது கூகிள் இணைய கடிதங்களை வாசிக்க முடிகிறது. மேலும் நமக்கு ஏதனும் புதிய செய்தி வந்திருப்பின் இந்த வசதி நமக்கு எளிதாக உலாவியில் தெரியப்படுத்துகிறது.

02. ஓட்டும் குறிப்பேடு(Sticky Notes): ஒரே சமயம் நாம் பல இணையத்தளங்களில் உலவும் போது நமக்கு தெரியாமலே சில நல்ல செய்திகள் அல்லது சில நல்ல கருத்துகள் கிடைக்க பெறுவோம். அத்தகய சமயத்தில் அதை நினைவிப்படுத்தி கொள்ள நமக்கு கை கொடுக்கிறது ஓட்டும் குறிப்பேடு(Sticky Notes) என்ற கூடுதல் வசதி. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் நாம் ஒரு இணையத்தளத்தில் எடுத்த குறிப்பை மீண்டும் நாம் அதே தளத்தில் நுழையும் போது தானாகவே இது செயல்படுகிறது.



03. Shareaholic: இன்றைய தகவல் தொழில்நுட்பக்காலத்தில் தகவல் பரிமாற்றங்கள் மிகவும் விரைவாக நடைபெறுகிறது. இதற்கு நமக்கு பெரிய பலமாக இருப்பது பல சமூக வலைத்தளங்கள். நாம் சில பல இணையதளங்களில் பார்க்கும் அல்லது உலவும் செய்தியை பிறருடன் பகிந்து கொள்ள எதுவாக உருவாக்கப்பட்ட கூடுதல் சேவைதான் Shareaholic. 



04. நினைவு படுத்து (Remind Me):  மனித நாகரிகம் எவ்வளவு வளர்ந்தாலும் மனிதர்களுக்கு உரித்தான சில விசயங்களுள் முக்கியம் பெற்றது ஞாபகமறதி. இந்த விஷயம் கணிணி உபயோக படுத்தும் நபர்களிடம் இப்போது அதிகரித்து வருகிறது. இதை அறிந்து உருவாக்கப்பட்ட சேவை தான் நினைவு படுத்து (Remind மீ). இதை கொண்டு நாம் சில செயல்களை சரியான நேரத்திற்குள்  செய்ய இதன் துணையை நாடலாம். 






05. பிக்னிக் (Picnik): நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக புகைப்படங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்போம். இதை தெரிந்து வைத்து உள்ள பிக்னிக் (Picnik) சேவை நாம் எந்தவொரு இணையத்தளத்தில் உலாவி கொண்டு  இருந்தாலும் அதன் உள்ளே உள்ள படங்களை நாம் நமது மனதிற்கு ஏற்ற வகையில் அதை மாற்றலாம். அந்த படங்களில் பல செயல்களை செய்ய இந்த சேவை வித்திடுகிறது. 





06. நெருப்புப்புச்சி (FireBug) : இணையத்தள வடிவமைப்பாளர்கள் மிகவும் ரசிக்கும் மற்றும் அவர்களக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட சேவை தான் இந்த  நெருப்புப்புச்சி (FireBug) . இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நம் எந்தவொரு தளத்தில் இருந்தாலும் சரி அதில் உள்ள எந்தவொரு பகுதியை தேர்ந்தெடுத்து இந்த  நெருப்புப்புச்சியை  (FireBug) சொடுக்கினால் அதன் அனைத்து கோடிங் முறையும் நமக்கு அகப்படுகிறது.







7. கூகிள் டாக்: இந்த கூடுதல் வசதி மூலம் நாம் நமது க்ரோம் உலாவியின் மூலமாகவே நமது நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் வசதியை ஏற்படுத்தி தருகிறது.






08. X- க்ரோம்: இந்த கூடுதல் வசதி நமது க்ரோம் உலாவியை அழகு படுத்த உதவி செய்கிறது. ஆம், இதை கொண்டு நாம் நமது உலாவிக்கு ஏற்ற வண்ணங்களையும், சிறப்பு அம்சங்களையும் நிறுவ முடிகிறது.



Sunday, May 2, 2010

கணிணி உலவுதலை மிகவும் எளிமைப்படுத்தும் மென்பொருள்.

கணிணி என்றவுடன் நாம் அனைவரும் செய்யும் முதல் காரியம்    
நமது கணிணி நிலை வட்டில் (Hard disk) எந்த மாதிரி கோப்புகள் உள்ளன என்பதை ஆவலுடன் பாப்போம். இதை தவிர நாம் தினமும் குறைந்தது ஒரு நாளைக்கு கீழே சொல்லிய செயலை அன்றாட உபயோகிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறோம். 
MyComputer --> C:/ or D:/ or so on... மேலும் நாம் நமது அன்றாட தினசரி கணிணி வேலை செய்ய உதவும் மென்பொருள்களை தேடி தேடி அதை சொடுக்குவோம். இந்த அத்தனை விசயங்களையும் மிகவும் அழகான, பொலிவான அம்சத்தில் நமக்கு எளிதாக பயன்ப்படும் வகையில்  அளிக்கிறது StandAlone Stack      என்ற மென்பொருள். இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். 
மென்பொருளை நிறுவியுடன் அதன் அமைப்பு பக்கத்தில் சென்று உங்களக்கு ஏற்றவாறு அமைப்பினை மாற்றி கொள்ளவும்.

Friday, April 23, 2010

அதீத கணிணி மோகத்தை கட்டுபடுத்தும் மென்பொருள் !

 கணிணியில் அதுவும் இணையத்தில் காலம் நேரம் பார்க்காமல் இரவு முழுவதும் உறங்காமல் ராக்கோழியாக உலவும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? இந்த கேள்விக்கு பதில் ஆம் என்று கூறும் அனைவருக்கும் உதவும் விதமாக எழுத பட்டதுதான் இந்த பதிவு. இன்றைய கணிணி யுகத்தில் உலகில் உள்ள பலதரப்பட்ட மக்கள் பிறருடன் தொடர்பு கொள்ளவும் , தங்களது அறிவு ஆற்றலை பெருக்கி கொள்ளவும் இணையத்தில் குறைந்தது ஒரு நாளைக்கு 15 மணி நேரங்கள் உலாவுகின்றனர். இதன் காரணமாக அவர்களது உணவு, உறக்கம் என அனைத்தையும் மெய்மறந்து விடுகின்றனர். பெரும்பாலும் பதிவுலகத்தில் உள்ளவர்களும், சமூக வலைத்தளங்களை உலவும் நண்பர்களும் இந்த விசயத்திற்கு சிறந்த எடுத்துகாட்டுகள்.   இவர்கள் அனைவருக்கும் உதவும் விதமாக அமைந்துதான் "Bed Time Help" என்ற மென்பொருள். 

இந்த மென்பொருள் நமது உறங்கும் நேரத்தை சரியாக நினைவு படுத்தி நம்மை உறங்க செல் என கட்டளை இடுகிறது. இந்த மென்பொருளின் அமைப்புகளில் சென்று நீங்கள் உறங்க செல்லும் நேரத்தை தேர்ந்தெடுத்து கொள்ளவும். பின்பு எவ்வளவு நேரதிருக்கு ஒரு முறை உங்களக்கு நினைவுபடுத்த வேண்டும் என்பதையும், உங்கள் உறங்கும் நேரம் வந்தவுடன் கணிணியின் இயக்கத்தை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதையும் தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்
                                                 

Saturday, April 17, 2010

டிவிட்டர் , FaceBook உலவுதலை எளிதாக்கும் TweetDeck !


டிவிட்டர் ,FaceBook போன்ற சமூக வலைத்தளங்களை சுற்றிதான் இன்றைய இணைய உலகமே இயங்கி வருகிறது என்று கூறினால் அது மிகையாகது. அந்த அளவிற்கு மக்களிடம் அதன் வரவேற்பும்,. அதன் மூலம் நாம் பெற கூடிய செய்தி தொடர்பும் மிகவும் அத்தியாவசிய அம்சமாகும். இந்த நிலையில் நாம் அனைவரும் நமது தினசரி வேலைகளிலும், நமது மற்ற இணைய தேடலாலும் தொடர்ந்து டிவிட்டர் ,FaceBook போன்ற தளங்களில் தொடர்ந்து வளம் வருவது என்பது கடினமான செயல் ஆகும். எனவே இதை புரிந்து கொண்ட TweetDeck என்ற மென்பொருள் நமது டிவிட்டர் மற்றும் FaceBook  வலைத்தளங்களை அவர்களது மென்பொருளில் ஒருங்கிணைத்து நமக்கு உதவி புரிகிறார்கள்.
இந்த சேவை மூலம் நாம் எந்தவொரு உலாவியும் இல்லாமலேயே நமது Desktop  மூலமாகவே நமது சமூக வலைத்தளங்களை பார்த்து கொள்ளலாம். இதை விட பெரிய உதவியாக இருப்பது நமக்கு ஏதனும் தகவல் வந்திருப்பின் இந்த மென்பொருள் நமக்கு ஒலி எழுப்பி தகவல் தருகிறது. இதானால் நமது மற்ற வேலைகள் எதுவும் பாதிக்காவண்ணம் நம்மால் செயல்பட உதவுகிறது.
இதனை தரவிறக்க இங்கே சொடுக்கவும்: http://www.tweetdeck.com/desktop/

Wednesday, April 7, 2010

வீடியோ கோப்பினை எளிதாக இணையத்தில் தரவிறக்கம் செய்ய !

இணையத்தில் எந்தவொரு விஷயம் மக்களிடம் பிரபலமாக இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக வீடியோ பற்றிய விசயங்களும், வீடியோ கோப்புகளை மக்கள் ரசிக்கும் பாங்கும் தினமும் அதிகரித்து வரும் ஒரு அம்சமாகும்.  இதை பறைசாற்றும் வகையில்  யூ டூப்'ல்  உறுப்பினர் எண்ணிக்கையும், யூ டூபிற்கு தினமும் மக்களிடம் கிடைக்கும் வரவேற்பும் சொல்லில் சொல்ல முடியாதா அளவிருக்கு அபரிமிதமான கணக்காகும்.  நம்மில் பலர் இணையத்தில் உலவும் சமயத்தில் நமக்கு பிடித்தமான வீடியோ கோப்பினை தரவிறக்கம் செய்யவும் ஆசை படுவோம். ஆனால் யூ டூப் போன்ற பல இணையதளங்களில் தரவிறக்கம் செய்யும் அம்சம் இருக்காது. இதனால் நாம் சில மென்பொருள்களை தேடி பிடித்து நமது கணிணியில் நிறுவி தரவிறக்கத்தை மேற்கொள்வோம். ஆனால், அது எதுவும் தேவை இல்லை. ஒரு சிறிய ADD ON மூலமே நாம் நமது FireFox உலாவியில் யூ டூப்'ல் இருக்கும் எந்தவொரு வீடியோ கோப்பினையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே இந்த ADD ON வீடியோ ரசிகர்களுக்கு மிக பெரிய விடிவாக இருக்கும். 
உங்கள் FireFox உலாவியில் இந்த ADD ON' ஐ நிறுவ இங்கே சொடுக்குவும். 

இதை நிறுவிய உடன் நீங்கள் யூ டூபில் பார்க்கும் எந்தவொரு வீடியோ கோப்பின் கீழயும்
சிவப்பு நிற தரவிறக்க குறியீடு தோன்றி, உங்களக்கு ஏற்ற வகையில் MP4 allathu FLV அல்லது  3GP  போன்ற கோப்பு வகைகளை தேர்ந்து எடுத்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 




Saturday, April 3, 2010

என் புருவத்தை உயரவைத்த Blogger !

Gloson - எனது புருவத்தை மட்டும் அல்ல உலகில் உள்ள அனைத்து தலைச்சிறந்த பதிவர்களையும் ஆச்சரியம் பட வைத்திருக்கும் பெயர். நாம் அனைவரும் குறைந்தது நமது பத்தாவது வயதில் கம்ப்யூட்டர் என்ற வார்த்தையை அறிந்து வைத்திருப்போம். அதே போல் கண்டிப்பாக அந்த வயதில் நமக்கு இணையத்தை பற்றியோ, வலை பதிவு என்ற விசயத்தை பற்றியோ தெரிந்து இருக்க சிறிது கூட வாய்ப்புகள் கிடையாது. ஆனால் கணிணியின் பரிணாம வளர்ச்சி காரணமாகவும், இணையத்தின் அபார முனேற்றதாலும் இன்றைய தலைமுறையினர் இந்த விசயங்களில் தலைசிறந்து விளங்குகின்றனர்.அவர்கள் இந்த சிறு வயதிலேயே இவ்வளவு விசயங்களையும், இணையத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் தெரிந்து வைத்திருப்பது நாளைய தலைமுறையின் வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.
அந்த வகையில் என்னை ஆச்சரிய பட வைத்த ஒரு சிறுவன்(வயதில் மட்டுமே!) Gloson.
மலேசியாவில் வசிக்கும் இந்த சிறுவன் தனது பத்தாவது வயதில் இருந்து ப்ளாக் எழுதுவதாகவும், தனக்கு கவிதை எழுதவது மிகவும் பிடிக்கும் அன்றும் தனது முகப்பு பக்கத்தில் தெரிவித்து உள்ளான். சுமார் 4000 RSS சந்தாதாரர்களை பெற்று இருக்கும் இவனது ப்ளாக் டிவிட்டர், ப்ளோக்கிங், இணையம், கவிதை என பல துறைகளை அலசுகிறது. மிகவும் ரசிக்க வைக்கும் ஒரு சிறுவன். 


Thursday, April 1, 2010

Veoh Player, YouTube'ற்கு மாற்றா அல்லது போட்டியா?

இணைய உலகில் உலவும் அனைத்து நபர்களுக்கும் வீடியோ என்ற சொல்லை சொன்ன மறு வினாடியே அவர்கள் தங்கள் உலாவியில் சொடுக்கும் முதன்மையான தளம் யூ டூபாகதான் இருக்கும். நாம் நமது எண்ணதிருக்கு ஏற்ப நமக்கு வேண்டியே வீடியோ காட்சிகளை எந்த நேரத்திலும் சுலபமாக தேர்வு செய்து பார்க்கும் அளவிற்கு யூ டூபின் வளர்ச்சி அபரிமிதமானது. இந்த நிலைக்கு தன்னை இந்த இணைய உலகத்தில் ஒரு அங்கமாக இணைத்து கொண்டிருக்கும் யூ டூபின் சாதனை மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் ஆகும். இது வரை இந்த யூ டூப் என்ற உயர்ந்து வளர்ந்த ஒரு பெரிய சக்தியின் முன்பு பல சிறிய சிறிய வீடியோ தளங்கள் அவ்வபோது போட்டியிடுவது நமக்கு தெரிந்ததே. சிறிது காலத்திருக்கு அந்த தளங்களின் தாக்கம் இருந்து விட்டு மீண்டும் நாம் அனைவரும் யூ டூப் நோக்கி செல்வது வாடிக்கையான ஒரு விசயம்தான். 
ஆனால் 2007 'ன் இறுதியில் தொடங்கபட்டு பல பயனிட்டாளர்களை கணிசமாக தங்கள் பக்கம் திசை திருப்பி கொண்டு இருக்கும் VEOH Player இந்த கணிணி யுகத்தில் கவனிக்க பட வேண்டிய ஒரு அம்சமாகும். யூ டூபில் நம்மால் செய்ய முடியாத தரவிறக்கம் என்ற விசயத்தை இந்த VEOH Player மூலம் எளிதாக செய முடிகிறது. அது மட்டும் அல்லாமல் நீங்கள் விரும்பும் அனைத்து வீடியோ கோப்புகளும் யூ டூபில் இருப்பதை விட இந்த தளத்தில் நிறைய பார்க்க முடிகிறது. இந்த அனைத்து அம்சங்களையும் கொண்டு உள்ள இந்த Veoh பிளேயர் வீடியோகளை மிகவும் தெளிவாக பார்க்க அவர்கள் Veoh பிளேயர் என்ற ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்ய சொல்கிறார்கள். வெறும் 5 MB அளவே உள்ள இந்த மென்பொருள் மூலம் நமக்கு Veoh பிளேயர் சார்ந்த பல அம்சங்கள் கிடைகிறது. நீங்கள் உங்கள் Twiitter அல்லது Facebook கணக்கினை கொண்டு இந்த தளத்தில் உறுப்பினர் ஆகலாம். இந்த தளம் YouTube'ற்கு மாற்றா அல்லது போட்டியா? என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!
தளத்தின் முகவரி: http://www.veoh.com/
மென்பொருளை தரவிறக்க : http://www.veoh.com/download

Wednesday, March 31, 2010

உங்கள் வலைப்பதிவின் அம்சங்களை சோதிக்க உதவும் இணையத்தளம் !

வலைபதிவில் எழுதுவோர் ஆகட்டும் அல்லது இணையத்தளம் வைத்திருக்கும் நபர் ஆகட்டும். அனைவருக்கும் கண்டிப்பாக நமது தளம் மக்களிடம் எவ்வளவு பெரிய வரவேற்பு பெற்று உள்ளது என்றும், நமது தளம் உலகில் உள்ள அனைத்து தளங்களின் அம்சங்களுடன் எவ்வளவு பொருந்தி உள்ளது என சோதித்து பார்ப்பது நாம அனைவருக்குமே மிகவும் ஆவலான ஒரு விஷயம். எனவே இந்த அனைத்து எதிர்பார்ப்புகளையும் சோதிக்கும் வகையில் அமைந்துதான் http://www.iwebtool.com/ என்ற இணையத்தளம். நமது வலை பதிவின் தரவரிசை என்ன, நமது வலைபதிவு எவளவு நேரத்தில் திறக்கிறது என பல அம்சங்களை இங்கு நம்மால் சோதித்து பார்க்க முடிகிறது. எடுத்துகாட்டாக கீழே உள்ள படத்தை பார்க்கவும்.


படங்களை நுணுக்கமாகவும், 360 டிகிரியிலும் பார்க்க !

உலகில் தலைச்சிறந்த கட்டடங்களையும் , வியக்க வைக்கும் அதிசயங்களையும் நீங்கள்
 நுணுக்கமாகவும், 360 டிகிரியிலும் பார்க்க வேண்டும் என ஆசை உங்களுக்கு உள்ளதா? இந்த கேள்விக்கு ஆம் என்று நீங்கள் பதில் அளித்தால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லைவ் லாப்ஸ் கண்டுபிடித்துள்ள "SeaDragon" என்ற நிகழ்நிலை மென்பொருள் தளத்திருக்கு. ஆம் இந்த தளத்தில் நீங்கள் ஆசை படும் அனைத்து படங்களையும் மிகவும் நுணுக்கமாக பார்க்கும் அளவுக்கு வடிவமைத்து நம்மை ஆச்சிரியம் பட வைகிறார்கள். 
எடுத்துகாட்டு வேண்டும் என கூறும் நண்பர்களுக்கு இதோ தெளிவான விளக்கத்துடன் கூடிய படங்கள். கீழ கொடுத்துள்ள படத்தை பார்த்ததும் உங்களக்கு தோன்றும் எண்ணம் என்ன?

ஏதோ விண்வெளியில் உள்ள நட்சத்திரம் போன்றும், அல்லது பூமியை நோக்கி வரும் விண் கல் போன்றும் உங்களக்கு தோன்றலாம். ஆனால் உண்மை என்னவென்று "SeaDragon"இல் பார்த்த போது எனது புருவங்கள் தானாக உயர்ந்தது. புரியவில்லையா, இதோ இந்த படத்தில் உள்ளது இதுதான்,
 ஆம் முதல் படத்தில் உள்ள அனைத்து வண்ணங்களின் பெயர்களையும் வாசகமாக எழுதியதின் விளைவுதான் நமக்கு கிடைத்த இந்த படம். மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்!

Monday, March 29, 2010

20 MB 'ற்கும் மேல் இருக்கும் கோப்பினை இணைய அஞ்சலில் அனுப்ப.

ஏற்கனேவே எனது முந்தையே பதிவில் எப்படி 1 GB மேல் இருக்கும் கோப்பினை அஞ்சலில் அனுப்ப பண்டோ (Pando )  என்ற மென்பொருள் எப்படி உதவுகிறது என்பதை  பற்றி கூறி இருந்தேன். ஆனால் நமக்கு மென்பொருள் தேவை படாமல் அஞ்சலில் கோப்பினை அனுப்ப நமக்கு வழி வகுக்கிறது "YouSendIt" என்ற இணையத்தளம். இந்த தளத்தில் நாம் அதிகபட்சமாக 100  MB வரையிலான கோப்பினை எந்தவொரு மென்பொருள் இல்லாமலேயே நம்மால் இணைய அஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடிகிறது. முயற்சி செய்து பாருங்கள்.

Saturday, March 27, 2010

டிவிட்டரில் கோப்பினை பகிர்ந்து கொள்ள உதவும் FILETWT

உலகில் உள்ள அனைத்து விசயங்களையும் கூகிள் என்ற ஜாம்பவானிடம் போட்டி போட்டு கொண்டு இப்பொது இணையத்தில் கலக்கி கொண்டு இருக்கும் ஒரு விஷயம் தான் டிவிட்டர் என்று என்ற பல வல்லுனர்களும், கணிணி மேதைகளும் பெருமை அடைந்து வருகின்றனர். இதை மேலும் தெளிவு பருதுவது போல் இப்போது டிவிட்டரில் வந்திருக்கும் புதியதொரு சேவை தான் கோப்பினை டிவிட்டரில் பகிர்வது. பெரும்பாலும் நாம் இணைய அஞ்சல் முகவரி வைத்து செய்யும் முதல் வேலை நமது எண்ணங்களையும், பல தகவல்களையும் பிறருடன் பகிர்ந்து கொள்வதுதான். இந்த செயலை எளிது படுத்தியதன் விளைவுதான் டிவிட்டரின் அபார வளர்ச்சி. நாம் இணைய அஞ்சல் முகவரினை கொண்டு செய்யும் மற்றொரு காரியம் கோப்பினை பகிர்ந்து கொள்வது. இதை ஏன் டிவிட்டரில் முயற்சிக்க கூடாது என எண்ணியதன் விளைவுதான் FileTWT என்ற இணைய சேவை உருவானதின் கதை. (ஏற்கனவே நாம் வீடியோ மூலம் ட்வீட் செயலாம் - http://ipadiku.blogspot.com/2010/02/bubble-tweet.html)
இந்த சேவையின் மூலம் நாம் நமது கோப்பினை மற்றொரு டிவிட்டர் நண்பரிடம் எளிதாக பகிர்ந்து கொள்ள நமக்கு உதவுகிறது. இவர்கள் கோப்பு பகிர்வினை டிவிட்டரில் மிகவும் எளிதுப்படுத்தி உள்ளனர். நாம் நமது டிவிட்டர் கணக்கின் மூலம் இதில் புகுபதி (Login) செய்து நமது கோப்பினை எளிதில் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நமது கோப்பு நமது அனைத்து டிவிட்டர் நண்பர்களுக்கும் தெரியும். இதை குறிப்பிட்ட ஒரு நண்பருக்கு மட்டும் அனுப்ப இந்த தளத்தில் உறுப்பினராக வேண்டும். இந்த சேவையும் நமக்கு இலவசம். FileTwt தளத்திருக்கு செல்ல இங்கே சொடுக்குவும்.   உறுபின்னரனால் நமக்கு கிடைக்கும் அம்சங்கள் கீழ் வருமாறு:


1 GB அளவிலான கோப்பினை மெயில்'ல் எளிதாக அனுப்ப !


இணையத்தில் உலவும் அனைவரும் கண்டிப்பாக தங்களுக்கு என ஒரு சொந்தமான இணைய அஞ்சல் முகவரி வைத்திருப்போம். ஒவ்வொரு அஞ்சல் இணைய வழங்கிகளின் சிறப்பிற்கு ஏற்ப நாம் நமக்கு தேவையான அஞ்சல் வழங்கிகளை தேர்ந்து எடுத்து உபயோகித்து வருகிறோம். ஆனால் அனைத்து  இணைய வழங்கியிலும் நாம் சந்திக்கும் பெரும் பிரச்னை 20  MB 'க்கும் பெரிதான கோப்பினை நம்மால் பகிர்ந்து கொள்ள முடியாது. இந்த பிரச்சனைக்கான தீர்வினை இதுவரை எந்தவொரு பெரிய இணைய அஞ்சல் வழங்கியும் தரவில்லை என்பதுதான் உண்மை. இதை நன்கு உணர்ந்த பல நிறுவனங்கள் பெரிய அளவிலான அஞ்சல்  கோப்பு பகிர்வனை நமக்கு தந்து வருகிறது. அதில் மிகவும் பிரபலம் அடைந்து வருவது பண்டோ (Pando ) என்ற மென்பொருள். 
இந்த மென்பொருளின் மூலம் நாம் 1 GB அளவில்லான கோப்பினை நாம் நமது அஞ்சல் முகவரிக்கோ, நமது நண்பர்களின் அஞ்சல் முகவரிக்கோ எளிதில் அனுப்பலாம் என்பதுதான் இதன் முதல் சிறப்பம்சம். பண்டோ இணையதள முகவரிக்கு சென்று அதன் மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இப்போது நீங்கள் உங்கள் கணிணியில் உள்ள எந்தவொரு கோப்பினையும் அல்லது நேரடியாக கொப்புரைகலையே (Folders) அனுப்பி கொள்ளலாம். இந்த சேவை நமக்கு இலவசமாக கிடைக்கிறது. இதன் premium வெர்சனை பெற்று கொண்டால் நீங்கள் 4  GB அளவிலான கோப்பினை கூட பகிர்ந்து கொள்ளலாம். 
இதன் இணையத்தளத்தில் பண்டோ'வின் சிறப்பம்சமாக தெரிவித்திருக்கும் அம்சங்கள் கீழ் வருமாறு: 
  • Publish downloadable videos, photos and audio to any web site
  • Email files and folders up to 1GB
  • Use your existing email, no registration required
  • Know if your files are downloaded and how often
  • No need to be online when recipients download
  • No compression, FTP or flaky web uploads
  • IM links to your files or entire folders to any IM buddy

Tuesday, March 23, 2010

இணைய அனுபவத்தை Firefox'ல் எளிதாக்கும் "Foxtab"

இணையத்தில் உலவும் அனைவரும் கண்டிப்பாக ஒரு நாளைக்கு குறைந்தது 20 - 25 இணைய முகவரிக்கு சென்று தகவல்களை பெறுவோம். சில சமயம் நம்மை அறியாமலே மிகவும் ஆர்வத்துடன் பல நல்ல தளங்களுக்கு சென்று இருப்போம். சில தளங்களில் உள்ள நல்ல விஷயங்கள் காரணமாக அதை நமது ப்ரௌசெரில் Bookmark செய்து வைத்து கொள்வோம். இதனால் சில சமயங்களில் நமது புக்மார்க்கில் நம்மை அறியாமலே பல இணைய முகவரிகள் சில நாட்களிலே குவிந்து விடும். பின்பு ஒவ்வொரு முகவரியாக சென்று பார்த்து அது நமக்கு இப்பொது உபயோகம் ஆகிறதா என்று பார்போம். இதனால் நமது நேரம் மிகவும் செலவு ஆகும். இது ஒரு பிரச்னை என்றால், அடுத்த பிரச்னை நாம் ஒரே நேரத்தில் பல இணையத்தளங்களில் உலவி கொண்டிருக்கும் போது நம்மை அறியாமல் ப்ரௌசெரை முடி விடுவோம். இதனால் அனைத்து தளங்களையும் நாம் பிரௌசரின் வரலாற்றில்  (History) இருந்து எடுப்போம். இதுவும் ஒரு அசௌகரியமான வேலை. எனவே நமது இணைய அனுபவத்தை எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சேவைதான் FoxTab. 
இந்த சேவையை Firefox ப்ரௌசெரில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த சேவையின் மூலம் நமது ப்ரௌசெர் வரலாற்றை 3-D அனுபவத்தை கொண்டு  இணையதளங்களை உலவலாம். இந்த சேவையை இந்த Addon லிங்கை உபயோகித்து உங்கள் firefox'இல் இணைத்து கொள்ளுங்கள். மேலும் இந்த சேவையை பற்றி அறிந்து கொள்ள http://www.foxtab.com/gettingstarted/ தளத்திருக்கு செல்லவும்.

Monday, March 22, 2010

உங்கள் அலைபேசிக்கு தேவையான அனைத்து விசயங்களும் ஒரே இடத்தில்!

இந்த நவீன உலகத்தில் நமது அன்றாட வாழ்கையில் இன்றியமையாத பொருளாக மாறிவிட்ட பல சாதனங்களில் குறிபிடத்தக்க இடத்தை பிடித்திருப்பது அலைபேசிகள். நம்முடன் அனைத்து இடங்களுக்கும்  துணை போல வரும் அலைபேசிகள் நம்மை நமது உறவுகளுடனும், நண்பர்களுடனும் எப்போதும் தொடர்பில் இருக்க உதவி புரிகிறது. அத்தகைய அலைபேசிகளின் மீது நம்மில் பலருக்கும் தீராத ஆர்வம் இருக்கும். அதுவும் நமது அலைபேசிகளின் முகப்பு படங்களையும், நமக்கு பிடித்த அழைப்பு ஒலிகளையும் நாம் அடிக்கடி நமது எண்ணதிருக்கு ஏற்றவாறு மாற்றி கொண்டே இருப்போம். இதை செய்ய கண்டிப்பாக நாம் தேடி செல்லும் முதல் இடம் கூகிள். 
அங்கு நமக்கு வேண்டிய அனைத்து விசயங்களும் நமக்கு பிடித்த வகையில் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இதை நிவர்த்தி செய்ய நமக்கு கிடைத்திருக்கும் ஒரு அருமையான இடம்தான் ZEDGE.  இந்த தளத்தில் நமது அலைபேசிக்கு வேண்டிய அனைத்து விசயங்களும், அதாவது படங்கள் வீடியோகள் , தீம்ஸ், விளையாட்டுகள் என சகல விசயங்களும் நமது அலைபேசியின் அங்கத்தை பொறுத்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் இதில் நீங்கள் உறுப்பினராக மாறிவிட்டால் இன்னும் கூடுதல் சலுகைகள். இந்த சேவை முற்றிலும் இலவசம். இந்த தளத்தை ஒரு முறை சென்று பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும். 

Sunday, March 21, 2010

பிளாக்கர் பதிவுகளை டிவிட்டரில் இணைக்க.

டிவிட்டர் என்ற வழிமுறை வந்ததில் இருந்தே 
அதன் வளர்ச்சியும், அது மக்கள் இடத்தில பெற்றிருக்கும் வரவேற்பும் நாம் கற்பனையில் கூட எதிர்பார்க்காத ஓர் அபாரமான நிகழ்வு. இதை மனதில் வைத்து தான் இப்பொது எல்லாம் பதிவுலகில் பதிவுகளை எழுதும் அனைத்து நண்பர்களும் தங்களது பதிவுக்கான அங்கிகாரத்தையும், அதை மக்களிடம் விரைவாகவும், பலரிடமும் எடுத்த செல்ல டிவிட்டேரை உபயோகம் செய்ய தொடங்கிவிட்டனர். எனவே நமது பதிவுகளையும் டிவிட்டரில் பதிய வைக்க செய்ய வேண்டிய வழிமுறைகளை இந்த பதிவில் அளித்துள்ளேன். 
01 . இந்த விசயத்தை உங்கள் வலைபதிவில் நிறுவ முதலில் உங்களக்கு  டிவிட்டரில் ஒரு கணக்கு இருக்க வேண்டும்.
02 . பின்பு உங்கள் பிளாக்கரின் டாஷ்போர்டு (Dashboard) சென்று கொள்ளுங்கள். அங்கே Layout , Edit HTML சென்று தோன்றும் பக்கத்தில் 'Expand Widget Templates' என்ற ஆப்சனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
03 . கீழே உங்கள் பிளாக்கின் வார்ப்புரு நிரல் கிடைக்கும். அதில் " data:post.body/ " என்பதனை தேடுங்கள். அதன் கீழே கீழ்காணும் வரிகளை (Script) இணைத்து விடுங்கள்.
<script type="text/javascript">
tweetmeme_url = &#39;<data:post.url/>&#39;;
</script>
<script src="http://tweetmeme.com/i/scripts/button.js" type="text/javascript">
</script> 
4. இப்போது 'Save Template' கிளிக் செய்து உங்கள் வார்ப்புருவை சேமித்து கொள்ளுங்கள்.
05 . இப்போது உங்களின் அனைத்து பதிவுகளின் அருகே டிவிட்டேரின் 
சின்னம் தோன்றும்.(கீழே கொடுக்கப்பட்ட படத்தை பார்க்கவும்)
06 .அதை சொடுக்கி உங்களின் டிவிட்டரில்,
அந்த பதிவின் கருத்தைபதித்து(Tweet) கொள்ளுங்கள். 

Thursday, March 18, 2010

டெஸ்க்டாப் வால்பெபெர்ஸ் (Desktop Wallpapers) எடுக்க சிறந்த தளங்கள்.

கணிணியில் வேலை பார்க்கும் அனைவரும் குறைந்தது ஒரு நாளைக்கு 2 - 3 தடவையாவது தங்களது Desktop Wallpaper'ஐ தங்களது மன நிலையை பொறுத்து மாற்றி கொண்டு இருப்பார்கள். அப்போது அவர்கள் ஒவ்வொரு முறையும் கூகிள் செய்து தங்களக்கு பிடித்த படங்களை தரவிறக்கம் செய்து கொள்வார்கள். ஆனால் அப்போது அவர்கள் சந்திக்கும் முதல் பிரச்னை "Water mark". அதாவது நாம் எடுக்கும் படங்களில் எதோ ஒரு மூலையில் அதன் உரிமையாளர் தனது பெயரை லோகோவாக பதித்து இருப்பார். இரண்டாவது பிரச்னை நமது கணிணியின் அளவிருக்கு (Resolution) கிடைக்குமா என்பது சந்தகேமே. இந்த பிரிச்சனை எல்லாம் இல்லாமல் உயர்தர  Wallpaer'ஐ தரவிறக்கம் செய்ய சிறந்த 5 தளங்களை இந்த பதிவில் அளித்துள்ளேன். கண்டிப்பாக ஒவ்வொரு தளத்தில் இருக்கும் படங்களும் நமக்கு பிடித்தவாறும், சிறந்ததாகவும் இருக்கிறது. இந்த வலைதளங்களின் உரிமையாளர்களின் கற்பனை வளம் கண்டிப்பாக உங்களை வியக்க செய்யும். இதோ எனது பார்வையில் முதல் 5 சிறந்த வலை தளங்கள். (லோகோவினை சொடுக்கி அந்தந்த தளங்களுக்கு செல்லவும்)


Wednesday, March 17, 2010

சமூக வலைத்தளங்களை நொடியில் உங்கள் பிரௌசரில் கிளிக்க !

ஒரு நாளைக்கு குறைந்தது 2 - 3  மணி நேரங்கள் சமூக வலைதளங்களில் செய்திகளையும், நண்பர்களுடன் கருத்தகளையும் பகிர்ந்து கொள்ளும் நபரா நீங்கள் ? அப்படி என்றால் இந்தப்பதிவு உங்களக்குதான். இப்போது எல்லாம் குறைந்தது ஒருவர்க்கு ஒன்று அல்லது இரண்டு வீடுகள் இருக்கிறதோ இல்லையோ, இணையத்தில் உலவும் ஒவ்வொரு இணையனும்  (இணையத்தில் உலவும் இளைஞன்) Orkut, Facebook, Twitter, Linkedin, Flickr என எண்ணில் அடங்கா கணக்கில் சமூக வலைத்தளங்களில் தங்களை இணைத்து கொண்டு இருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு முறையும் தங்களது ஒவ்வொரு சமூக வலைதலங்களுக்கும் செல்ல தங்களது உலாவியில் (Browser) ஒவ்வொரு தளத்தையும் தனி தனியே பார்க்க வேண்டி இருக்கும். சில சமயம் ஒரு சமூக தளத்தில் அவர்களுக்கு Updates இருக்கும், சிலவற்றில்  இருக்காது. எனவே ஒவ்வொரு முறையும் அனைத்து தளங்களையும் பார்ப்பது என்பது சலிப்பு தட்டும். இதற்கு தீர்வாக உங்களது அனைத்து சமுக தளங்களும் உங்கள் உலாவியிலே இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் உங்களக்கு Updates வந்தால் அதை சுட்டி காட்டினால் இன்னும் எவ்வளவு வசதியாக இருக்கும்.

இதோ இதற்கான வழிமுறைகள் இந்த பதிவில் பட்டியல் இடப்பட்டுள்ளன. 

01 . டிவிட்டரை உங்கள் உலாவியில் நிறுவ: இப்போது எல்லாம் நாம் உலகத்தில் நடக்கும் பல செய்திகளை , கூகிள்ஐ விட டிவிட்டரில் தான் நிறைய தெரிந்து கொள்கிறோம். அந்த அளவிருக்கு டிவிட்டர் இப்போது அனைத்து தரப்பிலும் பிரபலம் அடைந்து வருகிறது. (டிவிட்டரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள: http://ipadiku.blogspot.com/2010/02/tweets-tweeples-people-in-twitter.html , http://ipadiku.blogspot.com/2010/02/blog-post.html ). டிவிட்டரை உங்கள் உலாவியில் நிறுவ இந்த லிங்கில் உள்ள Add-On'ஐ சொடுக்குங்கள். 

02 .  முகபுத்தகத்தை (அதாங்க FaceBook!) உங்கள் உலாவியில் நிறுவ:  Orkut'ஐ அடித்து துவம்சம் செய்து விட்டு இப்போது இளைஞர்களிடம் அமோக வரவேற்பு பெற்று வரும் ஒரு சமுக வலைத்தளம். அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கருத்து கணிப்பில் சுமார் 4 மில்லியன் பயனிட்டர்களை கொண்டுள்ள வலை தளம் Facebook என்பது ஒன்றே போதும் அதன் வெற்றியை பற்றி சொல்ல.  அதை உங்கள் உலாவியில் நிறுவ இங்கு உள்ள லிங்கில் இருக்கும் Add on'ஐ சொடுக்கவும்.

03 . G-Mail'ஐ உங்கள் உலாவியில் நிறுவ: இப்பொது இணையத்தில் இருக்கும் அனைத்து நபர்களுக்கும் இருக்கும் பொதுவான ஒற்றுமை g-மெயில் முகவரிதான். நமக்கு வரும் அனைத்து கடிதங்களையும் வாசிக்கும் ஒரு பொதுவான அமைப்பு   G-மெயில் . அதை உங்கள் உலாவியில் நிறுவ இங்கு உள்ள லிங்கில் இருக்கும் Add on'ஐ சொடுக்கவும். 

இவை அனைத்தையும் நிறுவி உங்கள் நேரத்தையும், செயலையும் எளிது ஆக்குங்கள்.