Friday, May 7, 2010

உங்கள் டெஸ்க்டாப் 3D'யில் புதுப்பொலிவு பெற!


உங்கள் கணிணியோ, அல்லது மடிக்கணினியோ எதுவாக இருந்தாலும் சரி முதலில் நாம் அழகு படுத்த நினைக்கும் இடம் நமது டெஸ்க்டாப். நாம் அடிக்கடி உபயோகப்படுத்தும் மென்பொருள் ஆகட்டும், கோப்புகள் ஆகட்டும் நமக்கு எதுவாக இருக்கா அனைத்தையும் நமது டெஸ்க்டாப்பில் கிடத்தி வைப்போம். சில சமயம் நிறைய கோப்புகள் இணைந்து நமது டெஸ்க்டாப் மிகவும் கச கசவென்று ஆகிவிடும். நாம் நினைக்கும் கோப்பினை எடுப்பது இன்னும் சிரமமாக மாறிவிடும். எனவே இந்த பிரச்சனைகளை தீர்க்க வந்துள்ள மென்பொருள் தான் BumpTop. ( இந்த மென்பொருள் பற்றிய கூடுதல் தகவல் இந்த பதிவின் இறுதியில்).



இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே சொடுக்குவும். மற்ற டெஸ்க்டாப் மென்பொருள் போன்றுதான் இந்த மென்பொருளும் இருக்க போகிறது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிகொள்ளுங்கள். ஆம் இது முழுவதும் 3D தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மென்பொருள். நீங்கள் உங்களது டெஸ்க்டாப் கோப்பினை கொண்டு எந்தவொரு இடத்தில் வேண்டுமானால் வைத்து கொள்ளலாம். பெரிதாக்கலாம், சிறிதாக்கலாம். பிரிவின் அடிபடையில் அடுக்கி வைக்கலாம். இதை பற்றி பேசுவதை விட உபயோகித்து பாருங்கள். இதை பற்றிய வீடியோ பதிவு: http://www.youtube.com/watch?v=Ntg1Gpgjk-A&feature=player_embedded#! . 
இந்த மென்பொருள் பற்றிய கூடுதல் தகவல்: இந்த மென்பொருளின் சேவை மற்றும், அதன் அற்புதங்களை கண்டு  கடந்த வாரம் கூகிள் நிறுவனம் இதை  வாங்கி விட்டது. 


2 comments:

  1. Thanks for your information. But free download is now NOT AVAILABLE. Please update your article with thanks.

    NO MORE FREE DOWNLOAD.

    ReplyDelete
  2. May 7 முதல் அவர்கள் தங்களது இலவச தரவிறகத்தை நிறுத்தி வைத்து உள்ளனர். இப்போது நான் புதிய தரவிறக்க லிங்கை கொடுத்துள்ளேன்.
    உங்களது வருகைக்கும், இதை தெரியபடுதியதிர்க்கும் மிக்க நன்றி.
    - இவண்.

    ReplyDelete