எப்பொதுமே ஒரு பிரபலமான வாசகத்தை நாம் நினைவில் வைத்திருப்போம். எனக்கு இந்த விசயத்தை படித்த பின்பு ஞாபகத்துக்கு வந்த வாசகம் "பிரேக் தி ரூல்ஸ்(Break the Rules)". ஆம் இதுவரை மனிதர்கள் மட்டும் தான் டிவிட்டரில் கலக்கி கொண்டு இருந்தார்கள். "ஏன்? எங்களால் டிவிட்ஸ் அனுப்ப முடியாதா?" என இனிமேல் உங்கள் செல்ல பிராணியான நாய்களும் கேட்க போகிறது. ஆம், இனிமேல் உங்கள் செல்ல பிராணிகளும் டிவிட்டரில் கலக்கலாம் என சொல்லி நாய்களின் மடியில் பால் வார்த்து உள்ளார்கள் "பப்பி டிவிட்ஸ்(Puppy Tweets)"  என்ற நிறுவனம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் முதலில் உங்கள் செல்ல நாயுக்கு ஒரு டிவிட்டர் கணக்கை தொடங்குங்கள். பின்பு பப்பி டிவிட்டர் காலரை வாங்கி உங்கள் நாயின் கழுத்தில் மாட்டி விடுங்கள். இப்பொது தான், இந்த இடத்தில தொழில் நுட்பத்தை உபயோகிகிரர்கள். உங்கள் நாயின் கழுத்தில் உள்ள காலரில் இருக்கும் சென்சார் உங்கள் நாயின் மனநிலைக்கு ஏற்ப உங்கள் கணிணியுடன் இணைக்க பட்டிருக்கும் Wi-Fi' க்கு தகவல் தரும். அதில் இருக்கும் தகவல்கள் ஏற்கனேவே சேமித்து வைக்க பட்டிருக்கும் டிவிட்சை மென்பொருளின் உதவியுடன் உங்கள் நாயின் டிவிட்டர் கணக்கில் இருந்து டிவிட்ஸ் அனுப்ப படும். இனிமேல் தினமும் உங்கள் நாயின் மிது ஒரு கண் வைத்து கொள்ளுங்கள். உங்களைவிட உங்கள் நாய் அதிக டிவிட்டர் ரசிகர்களை கவர்ந்து விட போகிறது.சில செல்ல நாய்களின் டிவிட்டர் கணக்குகள்:
http://twitter.com/Puppy_Tweet
http://twitter.com/Puppy_Tweet
| Tweet |  |  | 

 
 
No comments:
Post a Comment