Tuesday, February 2, 2010

டிவிட்டரில் Journalism.....


டிவிட்டர்'ன் அருமை பெருமைகள் பற்றி அனைவரும் அறிந்ததே! நாம் விரல் சொடுக்கும் நொடிக்குள் ஆயிரம் ஆயிரம் டிவிட்சை(Tweets) டிவிப்லஸ்(Tweeples - People in Twitter)விவாதித்து'ம் பேசிக்கொண்டு இருப்பார்கள். உலகின் உள்ள அனைத்து மூளை முடுக்குகளில் இருந்தும் செய்திகள் பறந்து கொண்டு இருக்கின்றன. இதை நன்கு உணர்ந்த நமது இந்திய நாட்டின் பத்திரிகையாளர்கள் பலர் தங்களையும் டிவிட்டர்'ல் இணைத்து கொண்டு செய்திகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் பொது மக்களிடம் நேரடியாக ஒரு விஷயத்தை விவாதிக்க முடிகிறது. சாதாரண பாமர மக்களின் கருத்து முதல் பலரது கருத்துகளை பதிவு செய்ய டிவிட்டர் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது. காலை முதல் மாலை வரை டிவிட்டர்'ல் மக்களின் கருத்துகளை கேட்டு இரவு தங்களது பிரத்தியேக நிகழ்ச்சியில்(Prime Shows) விவாதிகின்றனர். அவர்களுக்கு வந்த சிறந்த டிவிட்சை(Tweets) அவர்களது நிகழ்ச்சியுளும் ஓட விடுகின்றனர். ஆனால் இத்தகைய அருமையான சேவையை பெரும்பாலும் ஆங்கில செய்தி தொலைகாட்சிகளில் மட்டும் இதுவரை செயல் படுத்தி உள்ளனர். இந்த சேவையை ஏன் இன்னும் நமது தமிழ் தொலைகாட்சி நண்பர்கள் உபயோகிக்க ஆரம்பிக்கவில்லை என ஆதங்கமாக உள்ளது. இந்த இவணின் ஆதங்கம் என்று தீர போகிறது? சில பத்திரிகையாளர்களின் டிவிட்டர் முகவரிக்கு : http://twitter.com/#/list/Vasanth_/ஜௌர்நலிஸ்த்ஸ


5 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பரே. டிவிட்டர் பதிவு நன்றாக உள்ளது.

    அன்புடன் சைபர்சிம்மன்

    ReplyDelete
  2. வருக! வருக! நல்ல துவக்கம். தொடர்ந்து எழுதுங்கள். தொழிநுட்ப விசயங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். தமிளிஷ், தமிழ்மணம், தமிழ்வெளி, தமிழ்10, திரட்டி முதலான திரட்டிகளில் உங்கள் பதிவை பகிருங்கள். பலரை சென்றடையும்.

    இந்த இடுகையை பார்க்கவும். http://tvs50.blogspot.com/2009/05/tamil-blog-traffic-source.html

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Word Verfication -ஐயும் நீக்கி விடுங்கள். இந்த இடுகையை பார்க்கவும். http://tvs50.blogspot.com/2009/11/remove-word-verification-blogger.html

    ReplyDelete
  4. ட்விட்டருக்குள் இப்போது தான் உள்ளே நுழைந்து உள்ளேன். தொடர்ந்து எழுதுங்கள். படிக்கலாம்.

    ReplyDelete
  5. hey dude... great work!!!

    Keep this blog buzzing with interesting stuffs!

    My full support guaranteed!

    UKAMATHU KAIVIDEL!

    SELVEN

    ReplyDelete