Sunday, March 21, 2010

பிளாக்கர் பதிவுகளை டிவிட்டரில் இணைக்க.

டிவிட்டர் என்ற வழிமுறை வந்ததில் இருந்தே 
அதன் வளர்ச்சியும், அது மக்கள் இடத்தில பெற்றிருக்கும் வரவேற்பும் நாம் கற்பனையில் கூட எதிர்பார்க்காத ஓர் அபாரமான நிகழ்வு. இதை மனதில் வைத்து தான் இப்பொது எல்லாம் பதிவுலகில் பதிவுகளை எழுதும் அனைத்து நண்பர்களும் தங்களது பதிவுக்கான அங்கிகாரத்தையும், அதை மக்களிடம் விரைவாகவும், பலரிடமும் எடுத்த செல்ல டிவிட்டேரை உபயோகம் செய்ய தொடங்கிவிட்டனர். எனவே நமது பதிவுகளையும் டிவிட்டரில் பதிய வைக்க செய்ய வேண்டிய வழிமுறைகளை இந்த பதிவில் அளித்துள்ளேன். 
01 . இந்த விசயத்தை உங்கள் வலைபதிவில் நிறுவ முதலில் உங்களக்கு  டிவிட்டரில் ஒரு கணக்கு இருக்க வேண்டும்.
02 . பின்பு உங்கள் பிளாக்கரின் டாஷ்போர்டு (Dashboard) சென்று கொள்ளுங்கள். அங்கே Layout , Edit HTML சென்று தோன்றும் பக்கத்தில் 'Expand Widget Templates' என்ற ஆப்சனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
03 . கீழே உங்கள் பிளாக்கின் வார்ப்புரு நிரல் கிடைக்கும். அதில் " data:post.body/ " என்பதனை தேடுங்கள். அதன் கீழே கீழ்காணும் வரிகளை (Script) இணைத்து விடுங்கள்.
<script type="text/javascript">
tweetmeme_url = &#39;<data:post.url/>&#39;;
</script>
<script src="http://tweetmeme.com/i/scripts/button.js" type="text/javascript">
</script> 
4. இப்போது 'Save Template' கிளிக் செய்து உங்கள் வார்ப்புருவை சேமித்து கொள்ளுங்கள்.
05 . இப்போது உங்களின் அனைத்து பதிவுகளின் அருகே டிவிட்டேரின் 
சின்னம் தோன்றும்.(கீழே கொடுக்கப்பட்ட படத்தை பார்க்கவும்)
06 .அதை சொடுக்கி உங்களின் டிவிட்டரில்,
அந்த பதிவின் கருத்தைபதித்து(Tweet) கொள்ளுங்கள். 

4 comments:

  1. நண்பரே இது டிவிட்டர் சேவை இல்லையே டிவிட்மீ சேவை என்று கருதுகிறேன்

    ReplyDelete
  2. அன்புள்ள நீச்சல்காரன்,

    ஆம் நண்பரே,நமது பதிவை பலரும் தங்கள் டிவிட்டெரில் பதிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் இந்த சேவையை நமக்கு அளிப்பது டிவீட்மீமீ (Tweetmeme).

    நன்றி,
    இவண்.

    ReplyDelete
  3. நீங்கள் சொன்ன வழி முறைகளை செய்து பார்த்தேன். சரி வரவில்லையே.

    ReplyDelete
  4. abuanu அவர்களே,

    உங்களக்கு ஏதேனும் பிழை செய்தி வருகிறதா?
    நான் மீண்டும் இந்த வழி முறைகளை சோதித்து பார்த்தேன். சரியாக செயல்ப்படுகிறது.

    ReplyDelete