ஒரு நாளைக்கு குறைந்தது 2 - 3 மணி நேரங்கள் சமூக வலைதளங்களில் செய்திகளையும், நண்பர்களுடன் கருத்தகளையும் பகிர்ந்து கொள்ளும் நபரா நீங்கள் ? அப்படி என்றால் இந்தப்பதிவு உங்களக்குதான். இப்போது எல்லாம் குறைந்தது ஒருவர்க்கு ஒன்று அல்லது இரண்டு வீடுகள் இருக்கிறதோ இல்லையோ, இணையத்தில் உலவும் ஒவ்வொரு இணையனும் (இணையத்தில் உலவும் இளைஞன்) Orkut, Facebook, Twitter, Linkedin, Flickr என எண்ணில் அடங்கா கணக்கில் சமூக வலைத்தளங்களில் தங்களை இணைத்து கொண்டு இருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு முறையும் தங்களது ஒவ்வொரு சமூக வலைதலங்களுக்கும் செல்ல தங்களது உலாவியில் (Browser) ஒவ்வொரு தளத்தையும் தனி தனியே பார்க்க வேண்டி இருக்கும். சில சமயம் ஒரு சமூக தளத்தில் அவர்களுக்கு Updates இருக்கும், சிலவற்றில் இருக்காது. எனவே ஒவ்வொரு முறையும் அனைத்து தளங்களையும் பார்ப்பது என்பது சலிப்பு தட்டும். இதற்கு தீர்வாக உங்களது அனைத்து சமுக தளங்களும் உங்கள் உலாவியிலே இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் உங்களக்கு Updates வந்தால் அதை சுட்டி காட்டினால் இன்னும் எவ்வளவு வசதியாக இருக்கும்.
இதோ இதற்கான வழிமுறைகள் இந்த பதிவில் பட்டியல் இடப்பட்டுள்ளன.
01 . டிவிட்டரை உங்கள் உலாவியில் நிறுவ: இப்போது எல்லாம் நாம் உலகத்தில் நடக்கும் பல செய்திகளை , கூகிள்ஐ விட டிவிட்டரில் தான் நிறைய தெரிந்து கொள்கிறோம். அந்த அளவிருக்கு டிவிட்டர் இப்போது அனைத்து தரப்பிலும் பிரபலம் அடைந்து வருகிறது. (டிவிட்டரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள: http://ipadiku.blogspot.com/2010/02/tweets-tweeples-people-in-twitter.html , http://ipadiku.blogspot.com/2010/02/blog-post.html ). டிவிட்டரை உங்கள் உலாவியில் நிறுவ இந்த லிங்கில் உள்ள Add-On'ஐ சொடுக்குங்கள்.
02 . முகபுத்தகத்தை (அதாங்க FaceBook!) உங்கள் உலாவியில் நிறுவ: Orkut'ஐ அடித்து துவம்சம் செய்து விட்டு இப்போது இளைஞர்களிடம் அமோக வரவேற்பு பெற்று வரும் ஒரு சமுக வலைத்தளம். அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கருத்து கணிப்பில் சுமார் 4 மில்லியன் பயனிட்டர்களை கொண்டுள்ள வலை தளம் Facebook என்பது ஒன்றே போதும் அதன் வெற்றியை பற்றி சொல்ல. அதை உங்கள் உலாவியில் நிறுவ இங்கு உள்ள லிங்கில் இருக்கும் Add on'ஐ சொடுக்கவும்.
03 . G-Mail'ஐ உங்கள் உலாவியில் நிறுவ: இப்பொது இணையத்தில் இருக்கும் அனைத்து நபர்களுக்கும் இருக்கும் பொதுவான ஒற்றுமை g-மெயில் முகவரிதான். நமக்கு வரும் அனைத்து கடிதங்களையும் வாசிக்கும் ஒரு பொதுவான அமைப்பு G-மெயில் . அதை உங்கள் உலாவியில் நிறுவ இங்கு உள்ள லிங்கில் இருக்கும் Add on'ஐ சொடுக்கவும்.
இவை அனைத்தையும் நிறுவி உங்கள் நேரத்தையும், செயலையும் எளிது ஆக்குங்கள்.
Tweet |
|
|
No comments:
Post a Comment