Saturday, March 13, 2010

காப்பி பேஸ்ட்'ஐ (Copy + Paste) சுலபமாக்கும் டேரா காப்பி (TeraCopy)

Copy + Paste என்ற வார்த்தைகளை கணிணி உபயோகம் செய்யும் அனைவரும் தினமும் கேட்கவும், செய்யவும் கூடிய ஒரு முக்கியமான செயல். நாம் நமது கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை பறிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் நாம் தேர்ந்து எடுக்கும் முறை "காப்பி பேஸ்ட்". பல சமயங்களில் நாம் GB கணக்கிலான கோப்புகளை பறிமாற்றம் செய்யும் போது குறைந்தது அரை மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் அந்த சமயத்தில் நாம் கணிணியில் வேறதும் செயல்களை செய்தல் கண்டிப்பாக கணிணி ஹங்(Hang) ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. இது எல்லாம் போதாது என்று, நாம் இவ்வளவு நேரம் காத்திருந்தும் நாம் பறிமாற்றம் செய்த கோப்புகள் பாதியில் நின்று விடலாம். எனவே இந்த பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் தீர்க்க வந்த மென்பொருள் தான் டேரா காப்பி. இந்த மென்பொருள் பல மணி நேரங்கள் எடுத்து கொள்ளும்  காப்பி பேஸ்ட்'ஐ சில மணி துளிகளில் முடித்து விடுகிறது. அது மட்டும் அல்லாமல் இந்த காப்பி பேஸ்ட் வேலை முடியும் வரை நாம் எந்தவொரு தடையும் இல்லாமல் நமது கணிணியில் மற்ற வேலைகளை தடை இல்லாமல் செய்யலாம். நமக்கு இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை இங்கே சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.கண்டிப்பாக நமது கணிணியில் இருக்க வேண்டியே மென்பொருள் இது.

1 comment:

  1. பயனுள்ள சாஃப்ட்வேர் தகவல்...
    நன்றி..!

    -
    DREAMER

    ReplyDelete