Saturday, March 13, 2010

உங்கள் கணிணியின் டெஸ்க்டாபை (Desktop) கச்சிதமாக வடிவமைக்க !

கணிணியில் அன்றாடம் வேலை பார்க்கும் அனைவரும், நாம் வேலை பார்த்து வைத்த கோப்பினை நமக்கு ஏதுவான இடத்தில், விரைவாக எடுத்து மறு நாள் வேலை பார்க்கும் வகையில் நமது கணினியின் டெஸ்க்டாப்பில் சேமித்து வைப்போம். ஏதேனும் சிறிய வேலை என்றால் ஒன்றோ, இரண்டோ என்றோ சொற்ப நிலையில் கோப்பினை சேமித்து வைப்போம். இதுவே வரைகலை (Animation) அல்லது மென்பொருள் சார்பாக வேலை என்றால் கண்டிப்பாக குறைந்தது 10 - 15 கோப்புகளை நமது டெஸ்க்டாப்பில் சேமித்து வைப்போம். இந்த நிலைமையில் நமது டெஸ்க்டாப்பில் நிறைய கோப்புகள் சேர்ந்து பார்பதற்கும், நமது சரியான கோப்பினை தேர்ந்து எடுக்கும் வேலையே மிகவும் கடினம் ஆகி விடும் என்பது மிகவும் உண்மை. எனவே இந்த பிரச்சனையை சுலபாமாக தீர்க்க நமக்கு உதவுகிறது "Fences" என்ற மென்பொருள். இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். தரவிறக்கம் செய்து முடித்தவுடன் உங்கள் கணிணியில் அதை நிறுவி கொள்ளுங்கள். இப்பொது உங்களக்கு ஏற்ற கோப்பினை அழகாக எந்த இடத்தில் வேண்டுமோ அங்கே நிரப்பி கொள்ளுங்கள். உங்கள் டெஸ்க்டாப்பில் இரண்டு முறை சொடுக்கினால் அனைத்து கோப்புகளும் தெரியும். மீண்டும்  இரண்டு முறை சொடுக்கினால் அனைத்து கோப்புகளும்மறைந்து விடும். கண்டிப்பாக இந்த மென்பொருள் உங்களது கணினிக்கு புதிய பொலிவினை தரும் என்பது உறுதி. 
 இதை பற்றிய பல தகவல்களை இங்கே காணலாம்: http://www.stardock.com/products/Fences/screenshots.asp 



No comments:

Post a Comment