Tuesday, March 9, 2010

வலைப்பதிவில் எழுதுவதால் கிடைக்கும் முக்கியமான 4 பயன்கள்:

நாம் அனைவரும் நம்மை பதிவுலகில் சேர்த்து கொண்டு நமது கருத்துகளை பிறரிடம் பகிர்ந்து கொள்கிறோம். நாம் நமது பதிவிற்கு நிறைய நபர்கள் வந்து செல்ல வேண்டும், நிறைய பின்னூட்டங்கள் கிடைக்க வேண்டும் என  நிறைய ஆசைகள் வைத்து எழுதுகிறோம். . ஆனால் என்னை பொறுத்த வரையில் நமது ஆசைகள் எதுவாயினும் நாம் நமது எழுத்தின் மேல் உள்ள பற்றின் காரணமாக  எழுத வேண்டும். நான் மிகவும் ரசிக்கும் cybersimman'in வலை பதிவில் அவர் தான் வலைபதிவில் எழுதும் நோக்கத்தை இவ்வாறு கூறி இருப்பார். 
"இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்."
என்ன ஒரு உயர்ந்த எண்ணம். இதை மனதில் கொண்டுதான் நான் எனது வலை பதிவில் பதிவுகளை எழுதுகிறேன். சரி, நண்பர்களே இந்த பதிவின் கருத்துக்கு வருவோம். என்னை பொறுத்த வரையில் வலைப்பதிவில் எழுதுவதால் கிடைக்கும் முக்கியமான பயன்களை இங்கு கொடுத்து உள்ளேன்: 
01. புது விசயங்களை தெரிந்து கொள்ளலாம்: நாம் பதிவில் எழுத எழுத நமது எண்ணங்களில் புதிய யோசனைகள் உதித்து கொண்டே இருக்கும். சில நேரம் நமக்கு எந்தவொரு யோசனையும் வராத நிலையில் நாம் இணையத்தில் புதிய விசயங்களை தேடி கண்டுபிடித்து எழுதுவோம். இதன் மூலம் நமக்கு நிறைய புதிய விஷயங்கள் தெரிய வருகிறது.
02. எழுத்தாற்றல் ஓங்குகிறது: நாம் பதிவில் விசயங்களை வெளிக்கொணரும் போது நமது மொழி வளமும். நமது எழுத்து ஆற்றலும் மேலும் சிறப்பாக மாறுகிறது.
03. கற்பனை வளம் கூடுகிறது: நாம் ஒரு விசயத்தை தெரிந்தவுடன் அதை இந்த உலகத்துடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறோம். ஏற்கனவே அந்த விஷயம் பலருக்கு தெரிந்து இருந்தாலும், நாம் நமது கற்பனை மூலம் அதை வேறு விதமாக பதிவிடுகிறோம். இதனால் நமது கற்பனை திறன் செழுமை அடையும்.
04. நட்புலகம் விரிவு அடைகிறது: நாம் நமது பதிவின் மூலம் பல நண்பர்களை பெற முடியும். இதன் மூலம் அவர்களது கருத்தையும் நாம் அறிந்து கொள்ள எதுவாக இருக்கிறது. நல்ல நட்பு பதிவுலகத்திலும் கிடைக்க நமக்கு பதிவுகள் வாய்பினை ஏற்படுத்தி தருகிறது.

 

4 comments:

  1. நன்று நண்பரே! அப்படியே எதிர் விளைவுகளையும் பட்டியலிடுங்கள்!!

    ReplyDelete
  2. //நன்று நண்பரே! அப்படியே எதிர் விளைவுகளையும் பட்டியலிடுங்கள்!!

    அதுவும் சரிதான். சில நேரத்தில் அது ஒரு போதை. சுகமானதாக இருந்தால் சரிதான்...

    ReplyDelete
  3. உங்களது இந்தப் பதிவினை, நான் இன்று (19 டிசம்பர் 2010 ), வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். முடிந்தால் இங்கு வந்து படித்து விட்டு உங்கள் கருத்தினை சொல்லவும். நன்றி !

    ReplyDelete